கேரளாவில் வெறிநாய்கள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், ஒருவர் துப்பாக்கியுடன் வலம் வரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அவர் துப்பாக்கியை தூக்கிக்கொண்டு முன்னால் நடந்து செல்கிறார்.


மக்கள் வெளியில் வர முடியாத நிலை 


நம் ஊரில் நாய்கள் என்றால் பலருக்கும் பிடிக்கும், சினிமாவில், கதைகளில் எல்லாம் பல நாய்களை கண்டு ரசித்திருப்போம். நாமே பலர் நாய் மீது அன்புகொண்டு வீட்டில் வளர்ப்போம். ஆனால் அவற்றை சரியாக பராமரிக்காத பட்சத்தில், மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக மாறுகிறது. கேரள மாநிலம் இது போன்ற பிரச்சினையை தான் எதிர்கொண்டு வருகிறது. கேரளா மாநிலத்தில் இந்த வருடம் மட்டும் வெறிநாய் கடியால் சுமார் 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி நாய்களுக்குள் நோய் வேகமாக பரவி வருவதால் மக்கள் வெளியில் வர அச்சப்பட்டு வீட்டில் இருக்கும் சூழல் உருவாகியுள்ளது.  



துப்பாக்கி ஏந்திய தந்தை


வெறிநாய்களை கட்டுப்படுத்த கேரள அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் நாய்களின் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில், இதற்கு எதிராக ஆயுதம் சிலர் ஆயுதம் ஏந்தியுள்ளனர். அதில் ஒரு விடியோ வைரல் ஆகி உள்ளது. வீடியோவில் பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக ஒருவர் துப்பாக்கியுடன் முன்னே செல்ல பள்ளி மாணவர்கள் பின்னால் வருவது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்: பரவி வரும் வைரஸ் காய்ச்சல்: பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிப்பு


சுடவும் தயங்கமாட்டேன்


தொடர்ந்து சிறுவர்களை, பெரியவர்களை நாய்கள் தாக்கி வருவதால் அதிலிருந்து பள்ளி செல்லும் சிறுவர்களை பாதுகாக்கவே இவ்வாறு துப்பாக்கி ஏந்தியுள்ளதாகவும், அதுபோன்ற அச்சுறுத்தல் ஏதாவது நாய்களால் ஏற்பட்டால் நாய்களை சுட்டு தள்ளவும் தயங்கமாட்டேன் என்றும் துப்பாக்கி ஏந்திய நபர் வைரல் வீடியோவில் பேசியுள்ளார்.






நடவடிக்கைகள்


தொடர்ந்து நாய்க்கடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்ற நிலையில், சில நாட்களுக்கு முன்னர் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் வெறிநாய் கடித்ததில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து 12 வயது சிறுமி ஒருவரை நாய் கடித்தது, உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி மூன்று டோஸ்களாக செலுத்தப்பட்டது. ஆனாலும் அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதே போல 21 உயிரிழப்புகள் நிகழ்ந்ததையடுத்து அம்மாநில உயர்நீதிமன்றம் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. தெருநாய்களுக்கு உணவு அளிப்போர்தான் அந்த நாய்க்கு பொறுப்பு. அது யாரைக் கடித்தாலும் அதற்கும் அவர்கள்தான் பொறுப்பு எனக் கூறியது. இதனை கட்டுப்படுத்த கேரள அரசு 152 மையங்களை அமைத்து, கருத்தடை மற்றும் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு லைசென்ஸ் ஆகியவற்றை வழங்கி வருகிறது. கூடிய விரைவில் நாய்களை கொள்ளும் முடிவில் கேரள அரசு உள்ளது. அதற்கு பீட்டா போன்ற அமைப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண