டெல்லியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில் செவிலியர் இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும், மலையாளத்தில் பேசினால் மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. 






நர்ஸிங் சூப்பிரன்டன்ட் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ஜிப்மரில் மலையாள மொழி பயன்பாடு தொடர்பாக ஒரு புகார் வந்துள்ளது. பணியிடத்தில் சில செவிலியர் மலையாள மொழியிலேயே பேசிக் கொள்கின்றனர். பெரும்பாலான நோயாளிகளும், பணியாளர்களும் மலையாள மொழி அறியாதவர்கள். இதனால், அவர்களுக்கு அசவுகரியம் ஏற்படுகிறது. எனவே, மருத்துவமனை ஊழியர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும். மீறினால் மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதுதொடர்பாக ஊடகங்கள் பலவும் கேள்வி எழுப்பியும் டெல்லி அரசாங்கமோ அல்லது ஜிப்மர் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் அர்ச்சனா தாகூரும் எவ்வித விளக்கமும் கூறவில்லை. ஆனால் இது தொடர்பாக ஜிப்மரில் பணியாற்றிவரும் கேரள நர்ஸ் ஒருவர் கூறும்போது, யாரோ ஒரு நோயாளி நர்ஸ்கள் தங்களுக்குள் மலையாள மொழியில் பேசிக் கொள்வது புரியவில்லை எனக் கூறியதால், தலைமைச் செயலகத்திலிருந்து இந்த சுற்றறிக்கை வந்திருப்பதாகக் கூறபப்டுகிறது. இது மிகவும் தவறு. இங்குள்ள 60% நர்ஸிங் ஊழியர்கள் கேரளாவிலிருந்து வந்தவர்களே. நாங்கள் யாரும் நோயாளிகளிடம் மலையாளத்தில் பேசுவதில்லை. இங்கு மணிப்பூரி, பஞ்சாபி நர்ஸ்களும் உள்ளனர். அவரவர் அவரவர் மாநிலத்தவர்களுடன் பேசும்போது சொந்த மொழியைப் பேசுவது இயல்பே. இது பிரச்சினையே இல்லை எனக் கூறினார். இந்நிலையில், டெல்லி ஜிப்மரின் உத்தரவுக்கு டெல்லி எய்ம்ஸ், எல்என்ஜிபி, ஜிடிபி மருத்துவமனைகளின் மலையாள நர்ஸ் கூட்டமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.




மேலும் கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பியும் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தியும் இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதேபோல், காங்கிரஸ் எம்.பி. சசி தரூரும் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர், "சுதந்திர நாட்டில் அரசு இயந்திரங்கள் இதுபோன்ற உத்தரவுகளைப் பிறப்பிப்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஊழியர்கள் அவர்களுக்குள் பேசும்போது சொந்த மொழியில் பேசுவதில் என்ன தவறு. இது ஏற்புடையது அல்ல. மிகவும் கொடூரமானது. மற்றவர்களை புண்படுத்துவதும் கூட. மனித உரிமைகளுக்கும், இந்திய குடிமக்களின் அடிப்படை உரிமைகளும் எதிரானது" எனக் காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார்.


Venkaiah Naidu Twitter | மறுபடியுமா!! மீண்டும் வெங்கையா நாயுடு அக்கவுண்ட்டுக்கு ப்ளூ டிக் கொடுத்தது ட்விட்டர்மலையாள மொழிக்கு எதிரான டெல்லி ஜிப்மரின் சுற்றறிக்கைக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.