கடந்த 31 டிசம்பர் 2022ல் ஸ்டேட் பாங்கின் புதிய விதிமுறைகள் வெளியானதாக மீடியாவில் சில தகவல்கள் வெளியானது. புதிய விதிமுறைகளின்படி கருவுற்ற தாய்மார்களில் 3 மாதத்தைக் கடந்தவர்கள் பணிகளில் இருப்பதை தடுக்கும் வகையில் ’அவர்கள் தற்காலிகமாக பணிசெய்யத் தகுதியற்றவர்கள்’ என நிர்வாகம் அறிவிப்பதாகத் தகவல்கள் வெளியானது, 


வங்கியின் சுற்றறிக்கையின்படி,”கருவுற்றிருக்கும் சம்பந்தப்பட்ட பெண் குழந்தை பிறந்த நான்கு மாதத்துக்குப் பிறகே பணியில் சேரலாம்.அதுவரை அவர்கள் பணியில் இருக்கத் தகுதியற்றவர்கள்” என அறிவிக்கப்பட்டிருந்தது.






ஊடகங்களில் வந்த இந்தத் தகவல்களை தன்னார்வமாகக் கையிலெடுத்த டெல்லி மகளிர் ஆணையம் வங்கியின் இந்த நடவடிக்கை பாரபட்சமானது என்றும் சட்டத்தை மீறுவதாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், சமூகப் பாதுகாப்புக் குறியீடு 2020ன் படி அவர்களுக்கான சலுகைகளை இவை கிடைக்காமல் செய்யும் என்றும் டெல்லி மகளிர் ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விவகாரத்தில் வங்கி நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ள டெல்லி மகளிர் ஆணையம் வருகின்ற 1 பிப்ரவரி 2022க்குள் இதற்கு பதிலளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.


முன்னதாக, ஸ்டேட் பாங்க் அண்மையில் பிட்னஸ் கார்டுகளை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி அவ்வப்போது வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வழங்கி வருகிறது.  இதோடு வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்யும் விதமாக சலுகைகளும் வழங்கப்படும்  நிலையில் தற்போது அசத்தல் அறிவிப்பு ஒன்றை டிவிட்டர் வாயிலாக எஸ்பிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி  பிட்னஸ் மற்றும் ஹெல்த் ஆர்வலர்களுக்காக “எஸ்பிஐ பல்ஸ்“ என்ற கிரெடிட் கார்டை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. அப்படி என்ன மற்ற கிரெடிட் கார்டுகளில் உள்ளது போல் இதில் என்ன சிறப்பான வசதிகள் உள்ளது என்ற சந்தேகம் அனைவருக்கும் எழக்கூடும். அவற்றிற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக அனைத்துத்தகவல்களையும் இதில் எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.


எஸ்பிஐ தற்போது அறிமுகப்படுத்தியுள்ள எஸ்பிஐ பல்ஸ் கார்டினை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 1499 செலுத்தி வாங்கிக்கொள்ளலாம். இப்படி வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரூபாய் 4999 மதிப்புள்ள நாய்ஸ் கலர்பிட் பல்ஸ் ஸ்மார்ட் வாட்ச் பரிசாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த கார்டினைப்பயன்படுத்தி ரூ. 2 லட்சம் அல்லது அதிகமாக உபயோகப்படுத்துபவர்களுக்கு கிரெடிட் கார்டுகளுக்கு வழங்கப்படும் ஆண்டு சந்தாவில் இருந்து முழு விலக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.