மத்திய பிரதேசம் சாகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் லோதி தாக்கூர் என்ற சமூகத்தினர் தங்களை செல்வாக்கு உடையவர்களாக காட்டி வருகின்றனர். திருமண நிகழ்வுகளில் மணமக்களை குதிரையில் அழைத்து செல்லும் மரபுகள் தங்களுக்கானதாக சொல்லி கொள்கின்றனர். இந்நிலையில், அதே கிராமத்தில் வசிக்கும் திலிப் அகர்வார் என்பவர் தனது திருமண நிகழ்வுக்காக குதிரை ஒன்றை முன்பதிவு செய்திருந்தார். இவர்,பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர். மேலும், மேட்டுக்குடி வகுப்பினரால் தமக்கும், தமது குடும்பத்துக்கும் அபாயம் இருப்பதாக கூறி காவல்துறையிடம் புகார் அளித்தார்.  


 






 


இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு, கணியாரி (Ganiyari) கிராமத்தில்  முதன் முறையாகக் குதிரையின் மூலம் மணமக்கள் அழைத்து வரவழைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 100 காவலர்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டு மணமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தனர். இது, அக்கிராமத்தின் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை விடியல் பெற்றதற்கான அடையாளமாக இந்த நிகழ்வு பார்க்கப்பட்டது.    


இருப்பினும், இந்த மணமக்கள் அழைப்பு பேரணி நடந்த அடுத்த  சில மணி நேரங்களில் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. மணமகன் வீட்டின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம், தொடர்பாக, வன்கொடுமை சட்டத்தின் கீழ் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள நபர்களையும் கைது செய்ய வேண்டும் என்ற பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 


பெகாசஸ் சாப்ட்வேரை விலை கொடுத்து இந்தியா வாங்கியது.. பகீர் கிளப்பிய அமெரிக்க நாளிதழ்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண