Watch Video: மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் வீல் சேரில் உணவு டெலிவரி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


இணையத்தில் பல்வேறு சுவாரஸ்யமான வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகி வருவது வழக்கம். அதிலும் குறிப்பாக இணையத்தின் வேகத்தினால் உலகின் ஏதோ ஒரு பகுதியில் நடக்கும் ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு இணையவாசிகளால் மிகவும் அதிகம் விரும்பப்பட்டு, பின்னர் அதிக அளவில் வைரல் ஆக்கப்பட்டும் வருகிறது. அவ்வகையில் இந்த முறை இணையத்தை கலக்கும் ஒரு வீடியோ காண்போரை மிகவும் நெகிழவைத்துள்ளது. 


மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விகியில் உணவு டெலிவரி செய்யச் செல்லும் வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக, மாற்றுத்திறனாளி பெண் உணவு டெலிவரி தொழிலாளியான இவரது உழைப்பை இணையவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர். Grandparents Day : பாட்டி, தாத்தாவுக்கான தினம்.. வரலாறு, முக்கியத்துவம், உண்மைகள் என்ன?


இந்த வீடியோ தனது சமூக வலைதளைப் பக்கத்தில் வெளியிட்டுள்ள சுவாதி மலிவால் என்பவர், இன்ஸ்ப்ரேஷன் எனும் கேப்ஷனுடன் வெளியிட்டுள்ளார்.   இன்றைய காலத்தில், குறிப்பாக உணவு டெலிவரி எனும் ஒரு தொழில் இந்தியாவில் தோன்றிய பிறகு பலருக்கும் அது வேலை வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் மாற்றுத்திறனாள் பலர் இந்த உணவு டெலிவரி வேலையைச் செய்து வருகின்றனர். ஆனால் இந்த வீடியோவில் வீல் சேரில் உணவு டெலிவரிக்குச் செல்லும் ஸ்விகி டெலிவரி பணியாளராக மாற்றுத்திறனாளி பெண் அனைவரின் கவனத்தை ஈர்த்ததுடன், பெரும்பாலானோருக்கு உத்வேகத்தினை ஏபடுத்தியுள்ளது. 






மேலும், மனதை உருக்கும் இந்த வீடியோவை பார்த்து பகிர்ந்து வரும் பலரும், உழைத்து, தன் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் இந்த மாற்றுத்திறனாளி பெண் மிகவும் பாராட்டுக்குரியவர் என்றும், உழைப்பின் வடிவமாக இவர் இருப்பதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.  AK 61 Update : ஏகே 61 அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போது..? மஞ்சுவாரியர் கொடுத்த சூப்பர் அப்டேட் இது..!