சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக, கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில்கள், வரும் 14-ம் தேதி ஊருக்கு செல்வோர், 17-ம் தேதி ஊர் திரும்பும் வகையில் இயக்கப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் - போத்தனூர் அதிவிரைவு சிறப்பு ரயில்
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வருகிற 14-ந்தேதி சென்னை சென்ட்ரல் - போத்தனூர் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 14-ம் தேதி இரவு 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்(06027), மறுநாள் காலை 8.30 மணிக்கு போத்தனூர் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மறுமார்க்கத்தில், வரும் 17-ம் தேதி இரவு 11.30 மணிக்கு போத்தனூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்(06028), மறுநாள் காலை 8.20 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்
இதேபோல், வரும் 14-ம் தேதி, சென்னை எழும்பூர் - செங்கோட்டை இடையே எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று இரவு 9.55 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில்(06089), மறுநாள் காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல், மறுமார்க்கத்தில் 17-ம் தேதி இரவு 7.45 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்(06090), மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும் என தெற்கு ரயில்வேயின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில்
இதேபோல, வரும் 17-ம் தேதி, நாகர்கோவில் - தாம்பரம் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 17-ம் தேதி இரவு 11.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்(06012), மறுநாள் காலை 10.55 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மறுமார்க்கத்தில் 18-ம் தேதி மதியம் 3.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்(06011), மறுநாள் அதிகாலை 5.15 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.
மங்களூரு - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்
மேற்கூறப்பட்ட ரயில்களோடு, வரும் 14, 16 ஆகிய தேதிகளில், மங்களூரு சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து, திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்திற்கு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 14 மற்றும் 16-ம் தேதிகளில், மாலை 7.30 மணிக்கு மங்களூருவில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்(06041), மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மறுமார்க்கத்தில், 15, 17 ஆகிய தேதிகளில், மாலை 5.15 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில்(06042), மறுநாள் காலை 6.30 மணிக்கு மங்களூரு சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு, நாளை(08.08.2025), அதாவது வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.