கோவிட் - 19 தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. 


சென்னை – காரைக்குடி, சென்னை எழும்பூர்- மதுரை (02613, 02614), சென்னை எழும்பூர் - மதுரை (02635, 02636) ,  சென்னை -திருச்சி ( 02653, 02654) , சென்னை எழும்பூர் - மதுரை (06157, 06158 ),  சென்னை சென்ட்ரல் - ஈரோடு (02649- 02650), சென்னை சென்ட்ரல் - கோயம்பத்தூர்( 02673, 02674 ), சென்னை சென்ட்ரல் - கோயம்பத்தூர் (02679, 02680), சென்னை சென்ட்ரல் - கோயம்பத்தூர் (02681, 02682), சென்னை சென்ட்ரல் - மதுரை (06019, 06020), சென்னை எழும்பூர் - நாகர்கோவில் (06063, 06064), தாம்பரம் - நாகர்கோவில் (06191, 06192), சென்னை சென்ட்ரல் - ஜோலார்பேட்டை (06089, 06090), தாம்பரம் - நாகர்கோவில்  (06065, 06066)   உள்ளிட்ட ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. 


 


  


 


நாளை ( மே- 8ம் தேதி) முதல் இம்மாதம் 31-ஆம் தேதிவரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. 


மேலும், சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும்  சிறப்பு ரயில்களும் வரும் 16-ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.