இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக மழை பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில், தென்னிந்தியாவின் மிகவும் முக்கியமான தெலங்கானா மற்றும் ஆந்திரா மாநிலங்கள் திகழ்கிறது.
கடந்த சில தினங்களாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், அந்த இரண்டு மாநிலங்களிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, விஜயவாடா, மசிலிப்பட்டினம், குடிவாடா, கைகலுரு, நரசபுரம், அமராவதி, மங்களகிரி, நந்திகாமா மற்றும் பீமாவாரம் பகுதிகளில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவின் பல பகுதிகளில் ரயில்வே வழித்தடங்கள் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சிதைந்துள்ளது. சில இடங்களில் ரயில்வே கம்பிகள் சாய்ந்துள்ளது. இதை சரி செய்யும் பணிகளில் அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக 26 ரயில்களை ரத்து செய்துள்ளனர்.
- விஜயவாடா – செகந்திரபாத் (12713)
- செகந்திரபாத் – விஜயவாடா (12714)
- குண்டூர் – செகந்திரபாத், (17201)
- செகந்திரபாத் – சிர்புர் காசக்நகர்,(17233)
- செகந்திரபாத் – குண்டூர் (12706)
- குண்டூர் – செகந்திரபாத் (12705)
- செகந்திரபாத் – குண்டூர் (17202)
- விசாகப்பட்டினம் –செகந்திரபாத் (20708) செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் காகிநாடா துறைமுகம் – லிங்கம்பாலி (12737)
- கூடூர் – செகந்திரபாத் (12709)
- பத்ராசலம் – பால்ஹர்ஷா (17033)
- பால்ஹர்ஜா – காசிபேட் (17004)
- பத்ராசலம் – செகந்திரபாத் (17660)
- செகந்திரபாத்- பத்ராசலம் ( 17660)
- செகந்திரபாத் – பத்ராசலம் (17659)
- காசிபேத் – டோர்னகல்( 07753)
- ஹைதரபாத் – சாலிமர் (18046)
- செகந்திரபாத் – விசாகப்பட்டினம் (20707)
- விசாகப்பட்டினம் – செகந்திரபாத் ( 20708)
- செகந்திரபாத் – ஹவுரா ( 12704)
- செகந்திரபாத் – திருவனந்தபுரம் ( 17230)
- திருவனந்தபுரம் – செகந்திரபாத் ( 17229)
- மௌபுப்நகர் – விசாகப்பட்டினம் ( 12862)
- லிங்கம்பள்ளி – மும்பை( 17058)
- மும்பை – லிங்கம்பள்ளி ( 17057)
- கரீம்நகர் – திருப்பதி ( 12762)
இந்த ரயில்கள் மட்டுமின்றி 46 ரயில்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளது.