காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


சமீபத்தில் சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டார். சோனியா தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார். எனது இன்னிங்ஸ் பாரத் ஜடோ  யாத்திரையுடன் முடிவடைந்துவிட்டது. 2004 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் வெற்றிகளும், மன்மோகன் சிங்கின் திறமையான தலைமையும் எனக்கு தனிப்பட்ட திருப்தியை அளித்தன என்று காங்கிரஸ் கட்சியின் மாநாடு ஒன்றில் தெரிவித்திருந்தார்.