Smriti Irani Weight Loss | அமைச்சர் ஸ்மிருதி இராணியா இது? இப்படி இளைச்சுட்டாரே? கமெண்ட்ஸை தட்டும் பிரபலங்கள்..
Smriti Irani Weight Loss Photo: இன்ஸ்டாவில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிடும் ஸ்மிருதி சமீபத்திய போட்டோ மூலம் கவனம் பெற்றுள்ளார்.

நடிகையாக இருந்து தற்போது அரசியலில் வலம் வந்துகொண்டிருப்பவர் ஸ்மிருதி இராணியா (Smriti Irani). டெல்லியைச் சேர்ந்த பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர் ஸ்மிருதி இராணியா . தன்னுடைய வாழ்க்கையை சீரியல், சினிமாவில் தொடங்கிய ஸ்மிருதி தற்போது பாஜக கட்சியில் உள்ளார்.
தொடக்கத்தில் பாஜகவின் தேசிய செயலாளர், பாஜகவின் அனைத்திந்திய மகளிர் பிரிவு தலைவர், மனித வள மேம்பாட்டு அமைச்சர், ஜவுளித்துறை பொறுப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல அரசியல் பதவிகளையும், பொறுப்புகளையும் வகித்தவர். பெண்களின் பாதுகாப்பு குறித்தும், பாலியல் வம்கொடுமைகள் குறித்தும் பிரசார மேடைகளில் பேசி கவனம் பெற்றவர் இவர். 45 வயதான ஸ்மிருதி தற்போது பாஜகவில் முக்கிய பிரமுகராகவே பார்க்கப்படுகிறார்.
Just In



இன்ஸ்டாவில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிடும் ஸ்மிருதி சமீபத்திய போட்டோ மூலம் கவனம் பெற்றுள்ளார். நின்றுகொண்டு ஒரு பூவை பறிக்கும் ஸ்மிருதியின் சமீபத்திய போட்டோதான் வைரலாகியுள்ளது. குண்டான உடல்வாகுடன் இருந்த ஸ்மிருதி சமீபத்திய புகைப்படத்தில் மிகவும் மெலிந்து காணப்படுகிறார். அவரது உடல் எடை குறைப்பை பற்றி பதிவிட்டுள்ள பலரும் ஸ்மிருதி ஆளே மாறிவிட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இது வேற லெவல் வெயிட்லாஸ் எனவும் அவரது ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.