Death of two Kerala models: ஃபாலோ செய்த ஆடி கார்.. டெலிட் செய்யப்பட்ட சிசிடிவி.. கேரள அழகிகள் விபத்தில் திடுக்கிடும் தகவல்!

கேரள முன்னாள் அழகிகள் இருவர் சாலை விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Continues below advertisement

கேரளாவின் முன்னாள் அழகியான ஆன்ஷி கபீரும், இரண்டாம் இடம் பிடித்த அஞ்சனா ஷாஜனும் நவம்பர் 1ம் தேதி கார் விபத்தில் உயிரிழந்தனர். கொச்சியில் நடந்த  கார் விபத்தில் இருவரும் உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் 2019ம் ஆண்டு அழகிப்போட்டியில் கலந்துகொண்டு முதல் இரு இடங்களை பிடித்தவர்கள்.

Continues below advertisement

விபத்து நடந்த போது நடத்தப்பட்ட விசாரணையின்படி, கார் சென்றுகொண்டிருக்கும் குறுக்கே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க காரை வேகமாக திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கார் முழுவதுமாக சேதமடைந்து அப்பளமாக நொறுங்கியது. உயிரிழந்த இருவர் உட்பட மேலும் இருவர் காரில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.  ஆனால் தொடர் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


ஒதுக்குப்புறத்தில் மது குடிப்பது தவறல்ல... ஐகோர்ட் தீர்ப்பு: போராடி தீர்ப்பை பெற்ற விஏஓ!

முன்னால் அழகிகள் ஆடி சொகுசு காரால் பலவந்தமாக தொடரப்பட்டதாகவும், அதிலிருந்து தப்பிக்கும் முயற்சியிலேயே இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகிறது. விபத்துக்கு முன்னதாக அழகிகள் இருவரும்  கொச்சியில் நம்பர் 18 ஹோட்டலில் இருந்தே கிளம்பியுள்ளனர். ஆனால் அவர்கள் தொடர்பான சிசிடிவி காட்சிகள் அங்கு எதுவும் இல்லை. இது தொடர்பான விசாரணையின் போது, ஹோட்டலில் இருந்து பார்ட்டியை முடித்துவிட்டு தனது காரில் முன்னாள் அழகிகள் புறப்பட்டு சென்றுள்ளனர். அவர்களை ஆடி சொகுசு கார் ஒன்று வேகமாக பாலோ செய்துள்ளது. அந்த காரில் நம்பர் 18 ஹோட்டலைச் சேர்ந்த ராய் இருந்துள்ளார். அதனால் ராய் அவர்களை ஃபாலோ செய்துள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


போலீசாரின் பார்வையின்படி அந்த ஆடி கார வேண்டுமென்றே அவர்களை ஃபாலோ செய்திருக்க வேண்டும், அல்லது இரு காருக்கும் இடையே ரேஸ் மாதிரியான போட்டி நடந்திருக்க வேண்டும் என கணிக்கின்றனர். ஆனால் மலையாள செய்தி தொலைக்காட்சி தகவலின்படி, பார்ட்டியின் போதே முன்னாள் அழகிகளுக்கும், ராயுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதுதான் காரை பின் தொடரவும் செய்துள்ளார். இரு காரின் வேகம் முன்னாள் அழகிகளின் காரை விபத்துக்குள் சிக்க வைத்துள்ளது என கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஹோட்டலில் இருந்த சிசிடிவி ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக நம்பர் 18 ஹோட்டலின் உரிமையாளர் ராய் உள்ளிட்ட 5 ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

 ட்விட்டர் பக்கத்தில் தொடர

Continues below advertisement
Sponsored Links by Taboola