ஸ்பைஸ்ஜெட் (SpiceJet) விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென புகையால் சூழ்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விமானம் அவரசரமாக தரையிறக்கப்பட்டது. இதற்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பதிலளிக்குமாறு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (The Directorate General of Civil Aviation (DGCA) ) உத்தரவிட்டுள்ளது.
கோவாவில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த ’SpiceJet Q400 - VT-SQB’ விமானத்தின் எஞ்ஜினில் திடீரென புகை கிளம்பியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் விமான நிறுவன ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டன. அவரச நிலையை கருத்தில் கொண்டு விமான அருகில் உள்ள ரன்வேயில் தரையிறக்கப்பட்டது. இதனால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இது குறித்து பல பயணிகள் டிவிட்டரில் புகார் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். ஸ்பைஸ்ஜெட்டின் இதுபோன்ற 28 எஞ்ஜின்களும் boroscopic inspection சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.
இம்மாதத்தின் தொடக்கத்தில் இதேபோன்று ஒரு சம்பவம் நடைபெற்றது. ஏ.சி.யில் எண்ணெய் லீக்கேஜ் காரணமாக புகை கிளம்பியது. இதனால் அவரசரமாக ஹைதராபாத் விமான நிலையத்தில் அந்த விமான தரையிறக்கப்பட்டது.
இம்முறையும் விமானத்தினுள் புகை எழுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், ஸ்பைஸ்ஜெட் நிறுவன விமானத்தில் அடிக்கடி விபத்து சம்பவங்கள் அதிகரித்திருப்பது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.’
86 பயணிகள் இருந்த விமானத்தில் ஏறபட்ட விபத்தையும், விமானம் முழுவதும் புகை கிளம்பியதையும் விமானிகள் வீடியோ எடுத்து டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு புகார் அளித்தனர். இதுபோன்று அடுத்த முறை நிகழாமல் பார்த்துகொள்ள வேண்டும் என்றும் சில பயணிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த விமானத்தில் புகை கிளம்பியதால், அந்த நேரத்தில் ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய 9 விமானங்கள் சிறிது நேரத்திற்கு திசைதிருப்பப்பட்டன.
விமானத்தில் புகை கிளம்பியதை பயணிகள் செல்போனில் வீடியோ எடுத்தபோது அதை விமான நிறுவனத்தின் குழுவினர் தடுத்ததாகவும், சிலரின் செல்போனை பிடுங்கி அந்த வீடியோக்களை டெலீட் செய்ததாகவும் பயணிகள் டிவிட்டரில் புகார் அளித்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதமே இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படாமல் இருப்பதை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என்று விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுருந்தது. ஆனால், ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இது போன்ற கோளாறுகள் அதிகம் ஏற்படுவதாக புகார்கள் எழுகின்றன. இந்தாண்டில் மட்டும் ஸ்பைஸ் ஜெட் விமானங்களில் 8 முறை தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் அந்நிறுவனத்திற்கு ஜூலை மாதம் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இந்தமுறையாவது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இதை கவனத்துடன் கையாளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.