பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் நேற்று இரவு கொல்கத்தாவில் ஒரு நிகழ்ச்சி ஒன்றி பங்கேற்று இருந்தார். அதன்பின்னர் அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவர் கடைசியாக நெஞ்சு வலி ஏற்பட்ட பிறகு அந்த அரங்கத்திலிருந்து வெளியேறியது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் அவரை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வேகமாக வைரலாகி வருகிறது.
அவர் கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சியிலிருந்து வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அவர் அந்த அரங்கத்தில் ”ஏசி சரியாக ஓடவில்லை, ரொம்ப வியர்க்குது, கஷ்டமா இருக்கு” என்பது தொடர்பாக பேசியுள்ளார். இந்த வீடியோவை ரசிகர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவை கே.கே.வின் கடைசி வீடியோ என்று பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோவில் அவருக்கு அதிகமாக வியர்வை ஏற்படும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் அவர் ஏன் இங்கு ஏசி ஓடவில்லை என்று கேள்வி எழுப்பும் காட்சியும் பதிவாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்