கிருஷ்ணகுமார் குன்னத்


பிரபல பாலிவுட் பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் (Krishnakumar Kunnath) - KK என பிரபலமாக அறியப்பட்டவர். அவருக்கு வயது 53. மே 31ம் தேதி கொல்கத்தாவில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்றபோது மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல பிரபலங்கள் பாடகர் KKக்கு சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில் கேகேவின் இறுதி ஊர்வலம் இன்று நடைபெற்றது.






இறுதி அஞ்சலி


திரையுலகைச் சேர்ந்தர்கள்,உறவினர்கள்,ரசிகர்கள் என பலரும் பங்கேற்று கேகேவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். கேகேவின் மகன் நகுல், கேகே உடலுக்கு இறுதிச் சடங்குகளை செய்தார். பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.


பன்முகப் மொழிகளில் பாடும் வல்லமை பெற்ற கேகே, ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். 


ட்விட்டரில் இரங்கல்கள்


 










வீடியோ..


முன்னதாக, நெஞ்சு வலி ஏற்பட்ட பிறகு அந்த அரங்கத்திலிருந்து வெளியேறியது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. அந்த வீடியோவில் கேகேவை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றன. இந்த வீடியோ சோஷியல் மீடியாவுல் வேகமாக பரவியது