காங்கிரஸ் கட்சித் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சித்துவுக்கு ஓராண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறைவாசம் மேற்கொள்வதற்கு முன் தனக்கு சில வாரம் அவகாசம் வேண்டுமென சித்து கோரியுள்ளார். 


கார் பார்க்கிங் செய்வதில் நிகழ்ந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில், நவ்ஜோத் சிங் சித்துவுக்கு உச்சநீதிமன்றம் நேற்று (மே.19) ஓராண்டு கால கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது.


இந்நிலையில், தனது உடல்நிலையை காரணம் காட்டி, சிறைவாசம் மேற்கொள்வதற்கு முன் தனக்கு சில வார கால அவகாசம் வேண்டுமெனக் கோரி, சித்து உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். 


கார் பார்க்கிங் மோதல்


கடந்த 1988ஆம் ஆண்டு, குர்மான் சிங் என்பவருடன் நவ்ஜோத் சிங் சித்து, அவரது நண்பர் ரூபீந்தர் சாந்து ஆகிய இருவருக்கும் கார் பார்க்கிங் செய்வது தொடர்பாக மோதல் வெடித்தது. இதில் காயமடைந்த குர்மான் சிங் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.


அதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்த வழக்கு பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 2018ஆம் ஆண்டு சித்து குற்றமற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


சீராய்வு மனு


தொடர்ந்து குர்மான் சிங் குடும்பத்தினர் தொடர்ந்த சீராய்வு மனு உச்ச நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில், சித்துவுக்கு ஓராண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்


நவ்ஜோத் சிங் சித்து முதலில் பாஜகவில் இணைந்து எம்எல்ஏவாகப் பணியாற்றி வந்த நிலையில், தனக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை எனக்கூறி அங்கிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.


அதன் பின்னர் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து செயல்பட்டு வந்த நிலையில், அவருக்கும் முன்னாள் பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங்குக்கும் இடையே மோதல் வெடித்தது.


முன்னதாக  நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், தனது மாநிலத் தலைவர் பதவியை சித்து ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





 




 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண