கொல்கதாவில் விடுதியில் தங்கி இருந்த 26 வயது துப்பாக்கி சுடுதல் வீராங்கனை கோனிகா லயக் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவருக்கு, சமீபத்தில்தான் நடிகர் சோனு சூட் துப்பாக்கியை பரிசளித்திருக்கிறார்.
விடுதியில் தங்கி இருந்த அவர், தனது உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாநில அளவில், தங்கம், வெள்ளி பதக்கங்களை வென்றிருக்கும் அவர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆனால், போதுமான வசதி இல்லாததால், துப்பாக்கி வாங்க முடியாததால் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியாமல் இருந்தார். அப்போது கோனிகாவைப் பற்றி கேள்விப்பட்ட நடிகர் சோனு சூட், அவருக்கு புதியதொரு துப்பாக்கியை பரிசளித்தார். 2.70 லட்சம் ரூபாய் மதிப்பான ஜெர்மன் நாட்டு ரைஃப்பிள் அவருக்கு வழங்கப்பட்டது. இதனால், அவர் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
ஒலிம்பிக் வீரரும், அர்ஜூனா விருது வென்ற துப்பாக்கி சுடுதல் வீரரான ஜாய்தீப் கர்மாகரின் பயிற்சி அகாடெமியில் பயின்று வந்திருக்கிறார் கோனிகா லயக். இந்நிலையில், அவரது இறப்பிற்கு சோனு சூட் இரங்கல் பதிவை பதிவிட்டிருக்கிறார்.
”இன்று என்னுடைய நாள் அல்ல. தன்பாத் மட்டுமல்ல, மொத்த நாடும் உடைந்து போய் இருக்கின்றது” என கோனிகாவின் மறைவிற்கு சோனு சூட் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
கடைசி நான்கு மாதங்களில், துப்பாக்கி சுடுதல் விளையாட்டை சேர்ந்த நான்கு பேர் இந்தியாவில் தற்கொலையால் இறந்துள்ளனர். இதில், மூன்று பேர் பெண்கள். தொடர்ந்து நடைபெறும் தற்கொலை சம்பவங்களால் விளையாட்டு துறை அதிர்ச்சியில் உள்ளது.
மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் - Helplines Sneha Suicide Prevention helpline – 044 -2464000 (24 hours) State suicide prevention helpline – 104 (24 hours),iCall Pychosocial helpline – 022-25521111
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.