காங்கிரஸ் எம்.பி. சசி தரூருக்கு இண்டிகோ விமானத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஹைதராபாத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கிச் சென்ற விமானத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் பயணித்தார். அப்போது சில இளம் பயணிகள் அவரிடம் சென்று ஆட்டோகிராஃப் வாங்கினார்கள்.
இந்தப் பயணம் குறித்து சரி தரூர் கூறுகையில் ஓ மை இண்டிகோ விமானப் பயணம். ஹைதராபாத்தில் இருந்து திருவனந்த்புரம் நோக்கிச் சென்ற விமானத்தில் திடீரென்று கேப்டன் இந்தர்ப்ரீத் சிங் எனக்கு சிறப்பு வரவேற்பு அறிவித்தார். அந்த பயணத்தின் பெரும்பாலான நேரம் செல்வி எடுப்பதிலேயே சென்றது. சில இளம் பயணிகள் ஆட்டோகிராஃப் புத்தகத்துடன் வந்து கையெழுத்து வாங்கினார்கள் என்று பதிவிட்டுள்ளார்.
யார் இந்த சசி தரூர்?
லண்டனில் பிறந்து இந்தியாவில் வளர்ந்தவர் சசி தரூர். 1956ஆம் ஆண்டு, மார்ச் 9ஆம் தேதி பிறந்த இவர், டெல்லி செயின்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பும், அமெரிக்காவின் டஃப்ட்ஸ் பல்கலையில் சர்வதேச விவகாரங்கள் துறையில் மேல்படிப்பையும் முடித்தவர். அந்த காலகட்டத்தில் 22 வயதில் இந்த துறையில் மேல்படிப்பை முடித்த இளம் நபராக சசி தரூர் அறியப்பட்டார்.
1978இல் ஐ.நா அவையில் சேர்ந்த அவர், 2007ஆம் ஆண்டுவரை அதில் சேவையாற்றினார். கடைசியாக அவர் அங்கு உதவிச்செயலாளர் பதவியில் மக்கள் தகவல் தொடர்புப் பணியை கவனித்தார். 2006ஆம் ஆண்டில் ஐ.நா பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் நடந்தபோது, அதில் போட்டியிடுவதற்காக தமது ஐ.நா பணியில் இருந்து விலகினார் சசி தரூர்.
மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, இந்தியர் என்பதால் சசி தரூரை இந்தியா ஆதரித்தது. ஆனால், போதிய ஆதரவு இல்லாததால், போட்டியில் இரண்டாம் நிலையில் இருந்த சசி தரூர் பின் வாங்கினார்.
இதைத்தொடர்ந்து தாயகம் திரும்பிய அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2009 மக்களவை தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தது. அதில் அவர் வெற்றி பெற்றார். தொடர்ந்து 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தல்களிலும் அவர் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
சசி தரூரின் ட்விட்டரில் இருந்து...
Unexpected moments: on my @IndiGo6E flight from Hyderabad to Tvm last night, Captain Inderpreet Singh announced a “special welcome” for me & the passengers applauded. Spent most of the flight giving selfies. But some young passengers still came clutching autograph books! pic.twitter.com/QWfLnV77G6
— Shashi Tharoor (@ShashiTharoor) October 4, 2022
அந்த ட்விட்டர் பதிவின் கீழ் இண்டிகோ விமான நிலையம் தான் முதல் நன்றியை பதிவு செய்தது.