தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) தலைவர் சரத் பவார்  உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும் , முன்னாள் மகாராஸ்டிர மாநில முதல்வருமான  சரத் பவார் , உடல்நலக் குறைபாடு காரணமாக மும்பையில் உள்ள உள்ள பிரீச் கேண்டி  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் தலைவர் சரத் பவார்   உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்றும் வருகிற நவம்பர் 2 ஆம் தேதி அவர் டிஸ்ஜார்ஜ் செய்யப்படுவார் என்றும் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் நவம்பர் 4, 5 தேதிகளில் ஷீரடியில் நடைபெறும் கட்சியின் முகாம்களில் அவர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 






 


81 வயதாகும் சரத்பாவருக்கு கடந்த ஆண்டு பித்தப்பை பிரச்சனை இருப்பதாக கண்டறியப்பட்டு , 15 நாட்கள் தொடர் மருத்துவமனை கண்காணிப்பிற்கு பிறகு பித்தப்பை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அடுத்த மக்களவை தேர்தல் 2024ஆம் ஆண்டில் நடைபெறவிருப்பது நாம் அறிந்ததே . அதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருந்தாலும் கூட பல அரசியல் கட்சிகள் இப்போதிலிருந்தே தேர்தல் பணிகளை துவங்கிவிட்டன. ஆளும் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே அணியில் திரட்டும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அப்படி ஒரே அணியில் எதிர்க்கட்சிகள் இணைந்தால், சரத் பவார் அல்லது நிதிஷ்குமார் போன்ற மூத்த தலைவர்கள் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண