சீனக் கடன் செயலிகள் இந்தியா முழுவதும் கடன் கொடுத்து பின்னர் அதிக வட்டிகளை வசூலிக்கும் சம்பவம் அதிகரித்து வருகின்றன.  இதனால், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாதவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.


கொடுக்கும் கடன் தொகைக்கு கொடுமையாக வட்டியை வசூலித்து, பணத்தை கொள்ளையடிப்பதுடன், கடன் வாங்கியவர்கள் சுய விபரங்களை திருடி அவர்களை மிரட்டவும் செய்கின்றன.  இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்திருப்பதுடன், பல கோடி ரூபாய் சீனா சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


இது தொடர்பாக ஏற்கனவே ஏராளமான சீன கடன் செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. 
இந்த நிலையில் சீன கடன் செயலி சம்பவங்களில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கையை எடுக்குமாறு மாநில அரசுக்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. 


அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
சட்ட விரோத கடன் செயலிகளால் நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் பொதுமக்களின் உயிருக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சீன நிறுவனங்கள் தொடர்புடைய கடன் செயலிகள் குறித்து அரசுக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன.


எனவே, இந்தச் செயலிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பான தொழில்நுட்ப உதவிகளுக்கு தேசிய சைபர் குற்ற தடயவியல் ஆய்வுக் கூடத்தின் சேவையை பெற்று கொள்ளலாம். இதுபோன்ற செயலிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்


என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.


-----------------------


முன்னதாக, கர்நாடக மாநிலத்தில் ஃப்ளிப்கார்ட்டில் கேமிங் லேப்டாப் ஆர்டர் செய்த ஒருவருக்கு கல்லும், பழைய கணினி உதிரிப்பாகங்களும் கிடைத்த சம்பவம் சமீபத்தில் நடந்தேறியது.


லேப்டாப் ஆர்டர் செய்தவர் ஏமாற்றம்


கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்த சின்மயா ரமணா என்பவர் பிக் தீபாவளி சேலில் பிளிப்கார்ட்டில் கேமிங் லேப்டாப்பை ஆர்டர் செய்துள்ளார். வந்ததும், பெட்டியை திறந்து பார்த்தபோது, அதில் பழைய கணினி உதிரிபாகங்களுடன் பெரிய கல் ஒன்று அடங்கிய பெட்டி கிடைத்ததை கண்டு அதிர்ந்துள்ளார். அக்டோபர் 15 ஆம் தேதி, சின்மயா தனது நண்பரிடம் Flipkart Plus மெம்பர்ஷிப் இருந்ததால், Asus TUF Gaming F15 என்ற கேமிங் லேப்டாப்பை ஆர்டர் செய்தார். அது அவரிடம் அக்டோபர் 20 அன்று வந்து சேர்ந்தது. வெளியில் இருந்து சீல் வைக்கப்பட்ட அந்த பெட்டி வெளியில் இருந்து பார்க்க நன்றாக இருந்ததால் சின்மயா டெலிவரி செய்பவருடன் OTP ஐப் பகிர்ந்து கொண்டு வாங்கிக் கொண்டுள்ளார்.


கல்லும் உதிரி பாகங்களும்


ஆனால் அந்த ஃபிளிப்கார்ட் பேக்கேஜை திறந்தபோது, ​​உள்ளே பார்கோடுகள் மற்றும் தயாரிப்பு விவரங்கள் அகற்றப்பட்டு ஒரு சேதப்படுத்தப்பட்ட கணினி இருந்துள்ளது. பெட்டிக்குள் மடிக்கணினி தவிர அனைத்தும் இருந்துள்ளது. அதில் பழைய கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள் மற்றும் ஒரு கல் இருந்ததால், பெட்டி கனமாக தெரிந்துள்ளது. அதற்காகவே அவர்கள் அந்த கல்லையும் வைத்துள்ளனர் என்று தெரிகிறது.


ரிட்டர்ன் செய்யும் முயற்சி


இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர், அதனை ரிட்டர்ன் செய்ய முயன்றுள்ளார். ஆனால் விற்பனையாளர் ரிட்டர்ன் பாலிசி கொடுக்கவில்லை. ஆனாலும் ஃபிளிப்கார்ட் மூலம் ரிட்டர்ன் செய்யும் முறையில் ரெக்வெஸ்ட் கொடுத்துள்ளார். அதன் மூலம் விற்பனையாளரை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் இப்போதும் வந்த பார்சல் அப்படியே இருப்பதாக சின்மயா கூறியுள்ளார். சின்மயா, பிளிப்கார்ட் சிக்கலை விரைவில் விசாரித்து, பணத்தையோ, பொருளையோ தருவார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.