கர்நாடக காவல்துறை உதவி ஆய்வாளர் தேர்வு முறைகேடு மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இது தொடர்பாக மூத்த ஐபிஎஸ் அலுவலரான அம்ரித் பாலை குற்ற புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், முறைகேட்டில் அம்ரித் பாலுக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது என காவல்துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.






மாநில காவல்துறை ஆட்சேர்ப்பு பிரிவின் கூடுதல் காவல்துறை இயக்குநராக அம்ரித் பணியாற்றியபோது முறைகேடு நிகழ்ந்துள்ளது. திங்களன்று, சிபி சிஐடி அலுவலர்கள், பாலை மருத்துவப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு காவலில் எடுத்தனர். மேலும் விசாரணைக்காக அவர் போலீஸ் காவலில் எடுக்கப்படலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


காவல்துறை உதவி ஆய்வாளருக்கான தேர்வு விடைத்தாள் மற்றும் கேள்வித்தாள் வைக்கப்பட்டிருந்த அறையில் முறைகேடு நடந்ததாகவும் இதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் பால் கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. 


விடைத்தாள் மற்றும் கேள்வித்தால் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூமின் பொறுப்பாளராக இருந்த டிஎஸ்பி சாந்த குமார், முன்னதாக கைது செய்யப்பட்டார். 100 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.


கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், காவல்துறை உதவி ஆய்வாளர் பதவிகளுக்கான தேர்வை 54,287 பேர் எழுதினர். 545 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஆனால், காவல்துறை ஆட்சேர்ப்பு மோசடியில் பல அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. ஏஜென்டுகள், தேர்வை எழுதியவர்கள், அரசு அலுவலர்கள் என 50க்கும் மேற்பட்டோரை  கர்நாடக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


கல்யாண கர்நாடகா பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 67 பேரில் ஏழாவது இடம் பிடித்த வீரேஷ், 150 மதிப்பெண்களுக்கு 121 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால், 100 ஒன்றரை மதிப்பெண் கேள்விகளில் 21 வினாக்களுக்கு மட்டும் இவர் விடையளித்திருப்பது தெரியவந்ததையடுத்து, இந்த முறைகேடு வெளச்சத்திற்கு வந்தது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண