அந்தமான மற்றும் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. திங்கள்கிழமை மதியம் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4ஆக பதிவாகியுள்ளது. இதை, தேசிய நில அதிர்வு மையம் உறுதி செய்துள்ளது.
தென்கிழக்கு பகுதியில் ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவானது. போர்ட் பிளேரிலிருந்து தென் கிழக்கு திசையில் 193 கிமீ தொலைவில் பிற்பகல் 3:02 மணிக்கு நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கம் கடற்பகுதியில் பதிவானதால் சேதம் ஏதும் ஏற்படவில்லை. 10 கிமீ ஆழத்திற்கு நிலநடுக்கம் உணரப்பட்டது.
நாட்டில் எங்கேயாவது நில அதிர்வு சம்பவங்கள் உணரப்பட்டால், அதை கண்காணிப்பதற்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்ட அமைப்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் விளங்குகிறது. இன்று அதிகாலை, ஜம்மு காஷ்மீரில் ரிக்டர் அளவுகோலில் 3.2 என்ற அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
மதியம் 12.12 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், தோடா பகுதியில் பூமிக்குள் 5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக வானிலை ஆய்வு மைய அலுவலர் ஒருவர் தெரிவித்தார். காஷ்மீர் பள்ளக்காக்கு நில அதிர்வு எளிதாக ஏற்படகூடிய பகுதியில் அமைந்துள்ளது. எனவே, கடந்த காலத்திலும் நிலநடுக்கத்தால் காஷ்மீர் பெரும் பாதிப்பை சந்தித்து இருக்கிறது.
அக்டோபர் 8, 2005 அன்று, ரிக்டர் அளவுகோலில் 7.6 அளவுள்ள மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்ஓசி) இருபுறங்களிலும் 80,000 க்கும் அதிகமான மக்கள், இதனால் உயிரிழந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்