அரசியல் சாசன பிரிவு 124 ஏ-வை ரத்து செய்யக்கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இன்று விசாரணைக்கு வந்த அந்த வழக்கில் தலைமை நீதிபதி கூறியதாவது, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்தியர்களை அடக்க கொண்டுவரப்பட்ட தேசத்துரோக வழக்குகள் தேவையா? நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இந்த சட்டத்தை கடைபிடிப்பது ஏன்? தேசத்துராக வழக்கு என்பது ஒரு தச்சரிடம் ஒரு மரக்கட்டையை வெட்ட கொடுக்கப்பட்ட ரம்பம் போன்றது. அந்த ரம்பத்தை கொண்டு ஒட்டுமொத்த காட்டையும் தற்போது அழிப்பதாக தலைமை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியர்களை அடக்க கொண்டு வரப்பட்ட தேசத்துரோக வழக்குகள் இன்னும் தேவையா? தேசத்துரோக வழக்குகள் விசாரணை அமைப்புகளால் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்றார்