இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் மிகவும் காஸ்ட்லியான வீடான மும்பை ஆல்ட்டா மௌண்ட் சாலையில் அமைந்திருக்கும் அன்டிலியாவில் வசிக்கிறார்.  27  மாடிகளை கொண்ட இந்த வீட்டில் சகல வசதிகளும் இருக்கின்றன.


இந்நிலையில், மும்பை காவல் துறை கட்டுப்பாட்டு அறையை தொலைபேசியில் தொடர்புகொண்ட கால் டாக்சி டிரைவர் ஒருவர், அடையாளம் தெரியாத இரண்டு பேர் முகேஷ் அம்பானியின் வீடு குறித்து விசாரித்ததாக தெரிவித்தார். இதனால் காவல் துறை பரபரப்பானது.




அதனையடுத்து தகவல் கொடுத்த கால் டாக்சி ஓட்டுநரை காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர்,  “ஆசாத் மைதானம் அருகேயுள்ள கில்லா நீதிமன்றத்தின் வாயிலில், மஞ்சள் நிற நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட சில்வர் கலர் மாருதி வேகன் - ஆர் காரின் பின் சீட்டில் இருவர் அமர்ந்திருந்தனர்.


அவர்கள் முகேஷ் அம்பானியின் வீடு குறித்து விசாரித்தனர். அவர்கள் அமர்ந்திருந்த சீட்டின் கீழ் பை ஒன்று இருந்தது. இருவரும் குர்தா, பைஜாமா அணிந்திருந்தனர். ஹிந்தியிலும் உருதுவிலும் அவர்கள் பேசிக்கொண்டனர்” என தெரிவித்தார். இதனால் மும்பை நகர காவல்துறை உஷார்படுத்தப்பட்டுள்ளது.




ஓட்டுநர் கூறிய வாகன பதிவு எண்ணை வைத்து காரை  காவல் துறையினர் தேடிவருகின்றனர். மேலும், அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்கள் உதவியுடனும் காரை கண்டறியும் பணி நடைபெறுகிறது. வருகிறது. 


கால் டாக்சி டிரைவர் மட்டுமின்றி, கில்லா நீதிமன்ற சிக்னலில் அந்த காரை பார்த்ததாக ஆட்டோ ஓட்டுனர் ஒருவரும் கூறியிருப்பது மேலும் பரபரப்பை கூட்டியிருக்கிறது.


ஓட்டுநர் அளித்த தகவல்கள் அடிப்படையிலும் அவர் கூறிய அங்க அடையாளங்களை வைத்தும் இருவரின் மாதிரி உருவங்களும் வரையப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி ஆசாத் மைதானம் காவல் நிலையத்தில் இருந்து அன்டிலியாவுக்கு செல்லும் வழி நெடுகிலும் பேரிகேட் தடுப்புகள் போடப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெறுகிறது. 




முன்னதாக, முகேஷ் அம்பானி பிரிட்டன் நாட்டில் இருக்கும் பக்கிங்ஹாம்ஷைர் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் ஸ்டோக் பார்க்-ஐ 592 கோடி ரூபாய்க்கு வாங்கினார். இந்தக் கட்டடத்தில் 49 பிரமாண்ட பெட்ரூம்களுடன் பல வசதிகள் உள்ளன. இந்த வீட்டிற்கு தற்போது முகேஷ் அம்பானி குடும்பத்துடன் இடம்பெயர இருக்கிறார் எனவும், தனது வீட்டின் அருகே வெடிகுண்டுகளுடன் நிறுத்தப்பட்டிருந்த காரால் அவர் இந்த முடிவுக்கு வந்ததாக தகவல் வெளியானது.


ஆனால், லண்டனிலோ அல்லது உலகின் எந்த மூலையிலோ குடியேறுவதற்கான எந்தத் திட்டமும் இல்லை என அம்பானி தரப்பு விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண