இந்திய ராணுவத்திற்கு ஆட்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட இந்தியா முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திரபாத் ரயில் நிலையத்திலும் இன்று காலை சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் ரயில்நிலையத்திற்குள் புகுந்து அக்னிபத் திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் வன்முறையாக வெடித்ததில் 3 ரயில்களுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.


இந்த நிலையில், போராட்டக்காரர்கள் ரயில்நிலையத்திற்குள் உள்ளே நுழைந்தபோது அங்கே தண்டவாளத்தில் பயணிகளுடன் புறப்படுவதற்கு தயாராக இருந்த ரயில் ஒன்றின் ஏ1 கோச் மீது கற்கள், கட்டைகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளனர். அப்போது, அந்த கோச்சில் குழந்தைகள், பெண்கள் உள்பட 40 பயணிகள் உள்ளே இருந்துள்ளனர். திடீரென ரயில் மீது தாக்குதல் நடத்தியதால் பயணிகள் அலறியுள்ளனர்.




மேலும், ரயில் மீது தாக்குதல் நடத்திய அவர்கள் சட்டென்று அந்த பெட்டிற்கு தீ வைத்தனர். தாக்குதலினால் அலறிக்கொண்டிருந்த பயணிகள் திடீரென தீ வைத்ததால் உள்ளே இருந்த பயணிகள் பீதியில் அங்குமிங்கும் ஓடியுள்ளனர்.


கலவரக்காரர்கள் தீ வைத்த உடனே சுதாரித்துக்கொண்ட அங்கிருந்த ரயில்வே ஊழியரான ஏசி பவர் கார் மெக்கானிக்கான சுமன்குமார் சர்மா சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக ரயிலின் உள்ளே இருந்த 40 பயணிகளையும் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளார். மேலும், அந்த கோச்சை அருகில் இருந்த பெட்டிக்கு நகர்த்தியுள்ளார்.




பின்னர், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாதுகாப்பு படையினரின் உதவியுடன் 40 பயணிகளும் வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்கே இருந்த இரு நுழைவு வாயில்களும் திறக்கப்பட்டு பயணிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களை ரயில்வே பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். தீ வைக்கப்பட்ட ரயில் பெட்டிக்குள் சிக்கிக்கொண்ட 40 பயணிகளை பாதுகாப்பாக மீட்ட ரயில்வே ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


மேலும்,  செகந்திரபாத் ரயில்நிலையத்தில் நடைபெற்ற வன்முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டத்தின் காரணமாக செகந்திராபாத் மார்க்கமாக செல்லும் சுமார் 70க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானா மட்டுமின்றி பீகார், மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. செகந்திரபாத் ரயில் நிலையத்தில் இன்று நடைபெற்ற வன்முறையில் மூன்று ரயில்களுக்கு போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க நு Agnipath Protest LIVE: செகந்திரபாத் ரயில்நிலைய வன்முறையில் ஒருவர் உயிரிழப்பு..! 15 பேர் படுகாயம்..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண