Agnipath Protest LIVE: அக்னிபத் போராட்டம் எதிரொலி... பீகார், ஹரியானாவில் இணையதள சேவை நிறுத்தம்..

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வரும் போராட்டங்களை பற்றி உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 17 Jun 2022 08:17 PM

Background

 இந்திய ராணுவத்திற்கு வீரர்களை சேர்ப்பதற்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் என்ற புதிய திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இளைஞர்களும், மாணவர்களும் அக்னிபத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நாட்டின் பல பகுதிகளில் அக்னிபத் திட்டத்தை...More

Agnipath Protest LIVE: அக்னிபத் போராட்டம் எதிரொலி... பீகார், ஹரியானாவில் இணையதள சேவை நிறுத்தம்..

பீகாரின் 12 மாவட்டங்களில் இன்று முதல் 19 ஆம் தேதி வரை அனைத்து இணையதள சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதேபோல ஹரியானாவிலும் மாநிலத்தில் மகேந்தர்கர் பகுதியில் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு மொபைல் இணைய சேவைகள் மற்றும் அனைத்து எஸ்எம்எஸ் சேவைகளையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.