உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார். உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ள இயலாமல் மாணவர் சந்தன் ஜிண்டால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 22. வின்னிட்சியா தேசிய  மருத்துவக் கல்லூரியில் படித்து வந்த அவருக்கு கடந்த 2ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் சிகிச்சையை தொடர முடியாததால் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவர் பஞ்சாப் மாநிலம் பர்னாலைவைச் சேர்ந்துவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.


முன்னதாக, கார்கிவ் பகுதியில் உள்ள இந்தியர்கள் உடனே வெளியேற வேண்டும் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. கார்கிவ்வில் உள்ள இந்தியர்கள் உக்ரைன் நாட்டு நேரப்படி இன்று மாலை 6 மணிக்குள் கார்கிவ்வை விட்டு வெளியேறி, பெசோஷின், பாபாயி உள்ளிட்ட பகுதிகளை நோக்கி செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மோதல் நடைபெறும் கார்கிவ், பிற நகரங்களில் உள்ள இந்தியர்களை மீட்க வெளியுறவுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்



ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண