மத்தியப் பிரதேசத்தின் பள்ளிக்கல்வித்துறையால் நடத்தப்படும் `உமாங்’ ஹெல்ப்லைன் எண்ணுக்குப் பள்ளி மாணவர்கள் பலரும் அழைத்து, புகையிலை, அடல்ட் படங்கள், வீடியோ கேம்ஸ் முதலான போதைகளில் இருந்து விடுபட உதவி கேட்டு வருகின்றனர். மேலும்,  புகையிலை, அடல்ட் படங்கள், வீடியோ கேம்ஸ் முதலானவற்றிற்கு அடிமையாவதால் கல்வியில் கவனம் செலுத்த முடியாததையும் கூறியுள்ளனர்.



தொடங்கப்பட்ட 200 நாள்களில் சுமார் 10 சதவிகித தொலைபேசி அழைப்புகள் இத்தகைய போதைகளில் இருந்து விடுபடுவதற்காகவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில மாணவர்கள் கெட்ட நண்பர்களின் சவகாசத்தில் இருந்து விலகுவதற்காக உதவியும், காதலில் பிரச்னைகள் ஏற்படும் போது உருவாகும் உணர்வு குறித்து ஆலோசனையும் கோரியுள்ளனர்.







கடந்த 2020ஆம் ஆண்டு யுனிசெஃப் அமைப்புடன் இணைந்து மத்தியப் பிரதேசப் பள்ளிக் கல்வித்துறை சார்பில் `உமாங்க் ஹெல்ப்லைன் சேவை - 14425’ தொடங்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைகளிலும் இயங்கும் இந்த ஹெல்ப்லைன் சேவை, கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் இதுவரை சுமார் 1.92 லட்சம் அழைப்புகள் வந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 10 முதல் 19 வயது வரையிலான மாணவர்களிடம் பேசுவதற்காக நிபுணர்கள் இலவசமாக இயங்கி வருகின்றனர். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மாணவர்கள் உளவியல் ஆலோசனைக்காக அழைக்கலாம். மன அழுத்தத்தில் இருந்து மாணவர்களை மீட்கும் நோக்கத்தோடு இந்த ஹெல்ப்லைன் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் தங்கள் கல்வியை எதிர்கொள்ளவும், தேர்வு முடிவுகள் குறித்து பேசவும் இந்த ஹெல்ப்லைன் உதவுகிறது. இந்த ஹெல்ப்லைன் சேவையில் இரண்டு ஷிஃப்ட்களாக 6 நிபுணர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண