மகாராஷ்டிராவில் தொடர்ந்து வரும் அரசியல் சர்ச்சைகள் அடுத்தக்கட்டத்தை எட்டியுள்ளது. சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை வரும் 11 ஆம் தேதி வரை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று மகாராஷ்டிரா அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. 


அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்கம் நோட்டீஸ் குறித்து பதிலளிக்கவும் மகாராஷ்ட்ரா அரசுக்கு ஆணையிட்டுள்ளது. சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 16 பேரை தகுதி நீக்கம் செய்ய துணை சாபாநாயகர் நேற்று நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்நிலையில், ஜூலை 11 ஆம் தேதி வரை அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்றும் மாநில அரசு அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.








மகாராஷ்டிர அரசின் தகுதி நீக்க முடிவை எதிர்த்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் அளித்திருந்த மனுவிற்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


மகாராஷ்டிரா அரசியல் பிரச்சனை:


மகாராஷ்டிரா முதலமைச்சராக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். அதன்பின்னர் இரண்டரை ஆண்டுகள் தற்போது முடிவடைந்துள்ள சூழலில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் சிண்டே தன்னுடைய அதிருப்தியை பதிவு செய்திருந்தார். அத்துடன் அவருக்கு ஆதரவாக 15 பேரும் உள்ளதாக தெரிவித்து வந்தார். 


இந்தச் சூழலில் இவர்கள் 16 பேரையும் தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக துணை சபாநாயகர் ஒரு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அந்த நோட்டீஸிற்கு இன்று அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நோட்டீஸை எதிர்த்து ஏக்நாத் சிண்டே உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு விசாரணையில் ஏக்நாத் சிண்டே உள்ளிட்ட 38 எம்.எல்.ஏக்கள் உத்தவ் தாக்கரே அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொள்வதாக தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அங்கு ஆட்சியமைக்க உரிய பலம் யாருக்கும் இல்லாத நிலை உருவாகினால் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும் என்று கருதப்படுகிறது.


 


 


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண