சட்டமேதை, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றிய அம்பேதகரின் இரண்டாவது மனைவியான சவிதா அம்பேதகரின் 114வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. 


சவிதா அம்பேத்கர் பிறந்தநாள்


டாக்டர் சவிதா அம்பேத்கர், "மைசாஹேப்" அல்லது "மாய்" என்றும் அழைக்கப்படுபவர், இவர் இந்திய அரசியலமைப்பை எழுதிய டாக்டர் பீம்ராவ் அம்பேத்கரின் இரண்டாவது மனைவி ஆவார். தொழில் ரீதியாக ஒரு மருத்துவர், அவர் தனது கணவருடன் இணைந்து சமூக செயல்பாட்டிலும், குறிப்பாக பாகுபாடு எதிர்ப்பு மற்றும் தலித் மேம்பாட்டிற்கான இயக்கங்களிலும் தீவிரமாக ஈடுபட்டார். டாக்டர் சவிதா தனது வாழ்நாள் முழுவதும் டாக்டர் பிஆர் அம்பேத்கரின் நிழலில் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனவரி 27 அன்று அவரது 114வது பிறந்தநாளில், அவரது வாழ்க்கையைப் பற்றிய சில தகவல்கள் இங்கே.



படிப்பும் இயற்பெயரும்


டாக்டர் சவிதாவின் இயற்பெயர் சாரதா கபீர். அவர் 1909 இல் ரத்னகிரி மாவட்டத்தில் ஒரு மராத்தி பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை இந்திய மருத்துவ கவுன்சிலின் பதிவாளராக இருந்தார். சவிதா அம்பேத்கர் தனது ஆரம்பக் கல்வியை புனேவில் படித்தார். அதன் பிறகு, 1937 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள கிராண்ட் மருத்துவக் கல்லூரியில் MBBS பட்டம் பெற்றார்.


தொடர்புடைய செய்திகள்: Suicide : சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில்: கட்டிப்பிடித்தபடி ரயில் முன் பாய்ந்த ஜோடி.. காதலி உயிரிழப்பு, காதலன் கவலைக்கிடம்.. என்ன நடந்தது?


மருத்துவ வாழ்வு


குஜராத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தலைமை மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்தார். இந்த நிலையில் சிறிது நாட்கள் கழித்து, அவர் மும்பை சென்றார். நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவரது நோயாளியாக அவரை முதன்முதலில் சந்தித்துள்ளார். அவர்கள் சந்தித்த ஒரு வருட காலப்பகுதியில், இருவரும் சுமார் 40 முதல் 50 கடிதங்களை பரிமாறிக்கொண்டனர். இருவரும் ஏப்ரல் 15, 1948 அன்று புதுதில்லியில் திருமணம் செய்து கொண்டனர். இது அம்பேத்கரின் முதல் மனைவி ரமாபாய் இறந்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருமணம் ஆகும்.



சமூக செயல்பாடுகள்


டாக்டர் அம்பேத்கரை மணந்த பிறகு சவிதா அம்பேத்கர் என்று அவர் பெயர் பெற்றார். அம்பேத்கரின் கடைசி புத்தகமான புத்தர் மற்றும் அவரது தம்மம் நூலின் வெளியிடப்படாத முன்னுரையில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தனது ஆயுளை 8 முதல் 10 ஆண்டுகள் வரை நீட்டித்ததற்காக அவரது மனைவியை பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர் சவிதா தலித்-பௌத்த இயக்கத்திற்காக தீவிரமாக வாதிட்டார், பல மாநாடுகள் மற்றும் பொது நிகழ்வுகளில் பேசினார். புனேவில் சிம்பயோஸிஸ் சொசைட்டியின் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அருங்காட்சியகம் மற்றும் நினைவகத்தை நிறுவுவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் உடைமைகளை, அவர் இறந்து 26 ஆண்டுகளுக்குப் பிறகு, அருங்காட்சியகம் கட்டுவதற்காக 1982-ல் வழங்கத் தொடங்கினார். 2001 ஆம் ஆண்டு வரை, டாக்டர் சவிதா ஒவ்வொரு ஆண்டும் அம்பேத்கரின் பிறந்த நாள் மற்றும் இறப்பு நினைவு நாளில் அருங்காட்சியகத்திற்கு வருகை தந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.