ஆண்டின் காதல் மாதமான பிப்ரவரி வர இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் இப்போதே சில காதல் ஜோடிகள் பொது இடங்களில் ஒருவருக்கொருவர் அன்பை பகிர்ந்துகொள்ளும் வீடியோக்கள் வர துவங்கியுள்ளன. ஆனால் அது சமூக தொல்லையாக மாறுவதுதான் முகச்சுளிப்பை ஏற்படுத்தியுள்ளது


காரின் மேல் ரொமான்ஸ்


லக்னோவில் ஒரு ஜோடி நகரும் இரு சக்கர வாகனத்தில் நேருக்கு நேர் கட்டிப்பிடிப்பதைக் கண்ட சில நாட்களுக்குப் முன்பு வெளியாகி இருந்தது. 'தி சிட்டி ஆஃப் நவாப்ஸ்' என்ற இடத்தில் காரின் சன்ரூப்பைத் திறந்து ஒரு ஆண் ஒரு பெண்ணைக் கட்டிப்பிடித்து செல்வதை காட்டும் மற்றொரு வீடியோ தற்போது வெளிவந்து வைரலாகி வருகிறது. வழிப்போக்கர் ஒருவர் படம்பிடித்த வீடியோ, தற்போது முரட்டு சிங்கிள்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அந்த தம்பதியினர் ஆட்சேபனைக்குரிய செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஜோடி மற்றும் காரை அடையாளம் காண போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.






பைக்கில் கட்டிப்பிடித்து சென்ற ஜோடி


கடந்த வாரம், லக்னோ நகரில் இரு இளைஞர்கள் பைக்கில் செல்லும்போது கட்டிப்பிடித்து சென்றதாக கூறப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவுகள் 294 (ஆபாசமான செயல்) மற்றும் 279 (அடிப்படையில் வாகனம் ஓட்டுதல்) ஆகியவற்றின் கீழ் 23 வயது இளைஞரை நகர போலீஸார் கைது செய்தனர். இருப்பினும், அந்த பெண்ணை விடுவித்தனர். காவல்துறையின் கூற்றுப்படி, ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் "தகாத முறையில் பைக் ஓட்டியதற்காக" சிசிடிவி காட்சிகள் மூலம் டிரைவர் விக்கி சர்மாவை அதிகாரிகள் கண்காணித்து, கண்டுபிடித்து கைது செய்தனர் என்று கூறப்பட்டது. வீடியோவில் உள்ள பெண் மைனர் என்பதால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.


தொடர்புடைய செய்திகள்: Republic Day 2023: இன்று குடியரசு தினம்.. தேச தலைவர்களின் டாப் 10 சிந்தனைகளும், மேற்கோள்களும்!






விருமன் பட பாணி


இந்த வீடியோவை ஸ்கூட்டிக்கு பின்னால் சென்ற வாகனங்களில் வந்தவர்கள் படம் பிடித்துள்ளனர். விருமன் திரைப்படத்தில் ஒரு பாடலில் வருவது போல, ஷர்மா ஸ்கூட்டரை ஓட்டிச் செல்ல, அந்தப் பெண் அவனை நோக்கி அமர்ந்து, கால்களை அவரை சுற்றிக் கட்டிக் கொண்டிருந்தார். வைரலான வீடியோவில் இந்த ஜோடி முத்தமிடுவதும் காணப்பட்டது. உத்தரப்பிரதேச காவல்துறை சாலை பாதுகாப்பு குறித்த 16 வினாடி நீள வீடியோவை குடிமக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு, அவசரமாக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகளுக்கு எதிராக எச்சரித்தது.






எச்சரிக்கும் காவல்துறை


"பாதுகாப்பான சவாரியைத் செய்யுங்கள்". உங்கள் காதலியுடன் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி பயணம் செய்வது நிச்சயமாக உங்கள் கனவுகளை 'நசுக்கிவிடும்'! நல்ல நாட்களை ஏன் வீனாக்குகிறீர்கள்? என்று கேட்டு #DriveSafeRideSafe #RoadSafetyMonth, என்று குறிப்பிட்டு இருந்தனர். "ஆபத்தான" வாகனம் ஓட்டுவதில் தம்பதிகள் ஈடுபடுவதைக் காட்டும் வீடியோவுடன் உபி காவல்துறை ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது. "இதுதான் நீங்கள் விரும்பும் ரிலேஷன்ஷிப் கோல் என்றால்? அது ஒரு 'ஹர்ட்-பிரேக்கில்' முடிவடையும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். #FallForSafety, குறிப்பாக நீங்கள் உங்கள் அன்புக்குரியவர்களுடன் இருக்கும்போது", என்று குறிப்பிட்டதுடன், கூடுதலாக "சாலைப் பாதுகாப்பு மாதமாக ஜனவரி 5 முதல் பிப்ரவரி 4 வரை இயக்கப்படுகிறது" என்ற தகவலையும் அனிமேஷன் செய்தியுடன் தலைப்பிடப்பட்டது.