சவுதி ஏர்லைன்ஸின் கார்கோ விமானம் ஒன்று (சனிக்கிழமை) கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.


நடுவானில் உடைந்த விண்ட்ஷீல்ட்:


விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அதன் விண்ட்ஷீல்ட் உடைந்துள்ளது. இதனை கவனித்த விமானி உடனடியாக விமானத்தை தரையிறக்க அனுமதி கோரியுள்ளார். அதன்படி கொல்கத்தா விமான நிலையம் அவசர தரையிறக்கத்திற்கு ஏற்பாடு செய்தது. இதனையடுத்து விமானம் பகல் 12.02 மணியளவில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. 


பெரும் விபத்து தவிர்ப்பு:


முன்னதாக கடந்த வாரம், வாரணாசியிலிருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சென்னை ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் விமானி ஏர் டிராஃபிக் கன்ட்ரோல் ரூமை அணுகி விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டார். அனுமதியளிக்கப்பட்டதின் பேரில் விமானம் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் 137 பயணிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


விமான விபத்துகளில் 80 சதவிகிதம் மனிதப் பிழைகள் தான் முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும் விபத்துகள் விமானம் தரையிறங்கும் சமயத்தில் தான் அதிகம் நடக்கிறது. மனிதப் பிழைகள் என்பதில் விமானி, பொறியாளர், போக்குவரத்தை கட்டுப்படுத்தும் அதிகாரி முதலியோர் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அதில் அதிக பங்கில் விமானி தான் உள்ளார்.