இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 170 லட்சமாகியுள்ளது. 192,000 பேர் இறந்துள்ளனர். நாளொன்றுக்குச் சராசரியாக 2000-க்கும் அதிகமானோர் இறந்து வருகின்றனர். அண்மையில் டெல்லி, உத்தர பிரதேசம், குஜராத், ஹரியானா என அங்குள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட தொடங்கியதை அடுத்து மக்கள் கொத்துக் கொத்தாக இறக்கத் தொடங்கினர். மொத்தமாக எரியூட்டப்பட்ட அவர்களது சடலங்கள் குறித்தப் புகைப்படம் நாட்டையே பதைபதைக்க வைத்துள்ளது.
இந்த நிலையில் இறந்தவர்கள் எரியூட்டப்படும் இடத்தை சாட்டிலைட் படம்பிடித்துள்ள காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. எரியூட்டப்படும் பகுதியில் மட்டும் நெருப்பின் தடயங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் காட்சிகள் நாட்டையே உலுக்கியிருக்கிறது. நொய்டா, பிருந்தாவன், மதுரா, லக்னவ் உட்பட பல பகுதிகளிலிருந்து இக்காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.