நாடுமுழுவதும், இதுவரை 14 கோடிக்கும் அதிகமான தடுப்பூசியை இந்தியா செலுத்தியுள்ளது. வெறும் 99 நாட்களிலேயே இந்தியா இந்த எண்ணிக்கையை எட்டியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சுமார் 25 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன. இருப்பினும்,  தடுப்பூசியை எடுத்துக்கொண்ட பிறகு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஏனெனில், எந்த தடுப்பூசியும் 100 சதவீதம் பயனுள்ளதாக அமையாது.  


இந்திய சீரம் மையம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களின் தடுப்பூசிகள் இரண்டு முறை போடப்பட வேண்டும்.  இரண்டு கட்டங்களுக்கும் இடையே ஒரு மாத இடைவெளி இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார். இரண்டாம் கட்ட தடுப்பூசியை எடுத்துக்கொண்ட பிறகு 2 வாரங்கள் கழித்தே தொற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மனித உடலில் ஏற்படும் என்பதால் தடுப்பூசியை எடுத்துக்கொண்ட பிறகு பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 



தடுப்பூசி போட்டுக் கொண்டவொருவர் பாதுகாப்பாக இருந்தாலும், நோய்த் தொற்றை மற்றவர்களுக்கு பரப்ப முடியும். தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும், மிதமான கொரோனா நோய் அறிகுறி உருவாகுவதற்கு வாய்ப்புகள் உண்டு.  எந்த உருமாறிய கொரோனா நோய்த்தொற்றுக்கும் எதிரான பாதுகாப்பை முகக்கவசம் வழங்குகிறது.