2024ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருதுகள் 23 மொழிகளில் வந்த படைப்புகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தி, அசாமி, பெங்காலி, ஆங்கிலம், குஜராத்தி உள்ளிட்ட மொழி படைப்புகளுக்கு யுவ புரஸ்கார் விருதுகள் வென்ற எழுத்தாளர்கள் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. 


சாகித்ய யுவ புரஸ்கார் விருது: 


‘விஷ்ணு வந்தார்’ புத்தகத்தை எழுதிய லோகேஷ் ரகுராமனுக்கு சாகித்ய யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியான முதல் சிறுகதை தொகுப்பிற்கே சாகித்ய விருது பெற்றுள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த லோகேஷ் ரகுராமன்.


லோகேஷ் ரகுராமன் மே 23ம் தேதி 1990ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள நாடாகுடி என்னும் கிராமத்தில் பிறந்தவர். பெங்களூரில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிந்து வரும் இவர், பல இணைய இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளிவருகின்றன. விஷ்ணு வந்தார் புத்தகம் லோகேஷ் ரகுமானின் முதல் சிறுகதைத் தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. 


சாகித்ய பால புரஸ்கார் விருது: 


பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘தன்வியின் பிறந்தநாள்’ புத்தகத்தை எழுதிய யூமா வாசுகிக்கு சாகித்ய பால புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கான சாகித்ய அகாடமி பால புரஸ்கார் விருதுக்கு யூமா வாசுகி பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. யூமா வாசுகி என்ற புனைப்பெயரில் கவிதை, கதை எழுதி வருபவரின் இயற்பெயர் மாரிமுத்து. ’கசாக்கின் இதிகாசம்’ என்ற மொழிப்பெயர்ப்புக்கு கடந்த 2-17ம் ஆண்டு சாகித்ய விருது பெற்றவர் யூமா வாசுகி.