உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில், பங்குனி உத்திர விழாவுக்கு சபரிமலை ஐப்பன் கோயில் நடை நாளை மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மார்ச்,27 ஆம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி ஏப்ரல்,5 ஆம் தேதி வரை பங்குனி உத்திர திருவிழா நடைபெற உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயில்:

கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். நடப்பாண்டிற்கான மகரஜோதியை தரிசிப்பதற்காக கடந்த 14-ந் தேதி லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதேபோன்று,  ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறக்கப்பட உள்ளது.

 

S.no

பூஜைபிரசாதம்

விலை பட்டியல்

1.

நெய்அபிஷேகம்: 1 தேங்காய்

 ரூ. 10

2.

அஷ்டாபிஷேகம்

ரூ. 6,000

3.

கணபதி ஹோமம்

ரூ. 375

4.

உஷ பூஜை

ரூ. 1,500

5.

நித்ய பூஜை

ரூ. 4,000

6.

பகவதி சேவை

ரூ. 2,500

7.

களபாபிஷேகம்

ரூ. 38,400

8.

படி பூஜை

ரூ. 1,37,900

9.

துலாபாரம்

ரூ. 625

10.

புஷ்பாபிஷேகம்

ரூ. 12,500

11.

அப்பம் (1 பாக்கெட்)

ரூ. 45

12.

அரவணை (1 டின்)

ரூ. 100

13.

விபூதி பிரசாதம்

ரூ. 30

14.

வெள்ளை நிவேத்தியம்

ரூ. 25

15.

சர்க்கரை பாயசம்

ரூ. 25

16.

பஞ்சாமிர்தம்

ரூ. 125

17.

அபிஷேக நெய் (100 மிலி)

ரூ. 100

18.

நவக்கிரக பூஜை

ரூ. 450

19.

ஒற்றைகிரக பூஜை

ரூ. 100

20.

மாலை/வடி பூஜை

ரூ. 25

21.

நெல்பறை

ரூ. 200

22.

மஞ்சள் பறை

ரூ. 400

23.

தங்க அங்கி சார்த்தி பூஜை

ரூ. 15,000

24.

நீராஞ்சனம்

ரூ. 125

25.

இருமுடிக் கட்டு நிறைத்தல் (பம்பை

ரூ. 300

சிறப்பு பூஜைகள்: 

தினசரி ஆலயத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.  மேலும், பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை வரும் 26ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 27ஆம் தேதி காலை 9.45 மணிக்கு கொடி ஏற்றி வைத்து, தந்திரி கண்டரரு ராஜீவரு தொடங்கி வைக்கிறார். 

இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.