கேரளாவின் கொச்சியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான துருவ் மார்க் ஹெலிஹாப்ட்டர் விழுந்து நொறுங்கியது.
25 அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தபோது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனை சரிசெய்ய சோதனை செய்துகொண்டு இருக்கும் போதே ஹெலிஹாப்ட்டர் விழுந்து நொறுங்கியது. விபத்தினால் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடலோரக் காவல்படையின் மேம்பட்ட இலகுரக ஹெலிஹாப்ட்டர் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து இரண்டு மணி நேரம் விமான நிலையச் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதாக CIAL தெரிவித்துள்ளது.
"பிற்பகல் 2 மணியளவில் ALH செயல்பாட்டு பகுதியிலிருந்து அகற்றப்பட்டது மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்குப் பிறகு ஓடுபாதை கணிசமாக சரிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விமான நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன" என்று CIAL தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.