சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல சீசனுக்காக நடை திறக்கப்பட்ட நாள் முதல் கடந்த 4 நாட்களில் 3 லட்சத்து 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 70 ஆயிரம் பேரும், உடனடி பதிவு மூலம் 20 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படும் நிலையில் உடனடி தரிசனத்துக்கு அதிகப்படியான பக்தர்கள் வந்தனர்.

Continues below advertisement

மண்டல பூஜையின் ஆரம்பத்திலேயே வரலாறு காணாத கூட்டம் அலைமோதியதால், கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியானார். மேலும் பக்தர்களும் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் சிலர் ஐயப்பனை தரிசிக்க முடியாமல் வீடு திரும்பி சென்றுள்ளனர்.

Continues below advertisement

எனவே சபரிமலையில் கூட்ட நெரிசலின்றி பக்தர்கள் செல்ல சில கட்டுப்பாடுகளையும், மாற்றங்களையும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு செய்துள்ளது. அதாவது உடனடி தரிசன முறையில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 15 ஆயிரம் வரை மட்டுமே செல்லலாம். கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எருமேலி, சத்ரம் புல்மேடு வழியாக வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் இந்த கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலில் நேற்று ஒரு நாள் மட்டும் 80,000 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதிக பக்தர்களின் வருகை காரணமாக நேற்று முதல் 5,000 பேருக்கு மட்டுமே ஸ்பாட் புக்கிங் மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலையும் சன்னிதானத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. 8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வருகிற 24-ந்தேதி (திங்கட்கிழமை) வரை தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஸ்பாட் புக்கிங்கில் அனுமதிக்கப்படுவர். அதன் பின்னர் தினந்தோறும் 20 ஆயிரம் பக்தர்கள் ஸ்பாட் புக்கிங்கில் அனுமதிக்கப்படுவர்.ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் 20 ஆயிரம் பேருக்கு மேல் வந்தால் அவர்கள் மறுநாளில்தான் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அதேபோல் ஸ்பாட் புக்கிங் பிரிவுக்காக நிலக்கல் பகுதியில் புதிதாக 7 முன்பதிவு மையங்கள் தொடங்கப்பட உள்ளன. ஐயப்பன் கோவில் சன்னிதானத்தில் வரிசை குறைந்தால் மட்டுமே நடைப்பந்தலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதேநேரத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களில் தினமும் 70 ஆயிரம் பேர் வழக்கம் போல் அனுமதிக்கப்படுவர். இவ்வாறு கோவில் தேவசம் போர்டு நிர்வாகம் தெரிவித்துள்ளது.கோவில் அருகில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்ய தமிழகத்தில் இருந்து 200 தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர்