கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில், நடை திறக்கப்பட்டு உள்ளது. இதனை ஒட்டி இருமுடி காணிக்கை செலுத்த ஐயப்ப பக்தர்கள் தமிழ்நாடு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்து ஏராளமானோர் 3 தினங்களாக குவிந்துள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ்நாட்டில் உள்ள அரக்கோணம் என்டிஆர்எப் மூலம் 2 குழுக்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஐயப்பனை தரிசிக்க வந்த கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளிக்கு , அரக்கோணம் தேசிய பாதுகாப்பு படையினர் உதவிய சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று முன்தினம் தொடங்கி, அடுத்த மாதம் 27-ம் தேதி வரை 41 நாட்கள் மண்டல பூஜை காலமாகும். இதனை முன்னிட்டு நேற்று முன்தினம்  மாலை கோயில் நடை திறக்கப்பட்டது. பெருவழிப்பாதை, சிறு வழிப்பாதை உள்ளிட்ட அனைத்து பாதைகள் வழியாகவும் சென்று ஐயப்பனை தரிசிக்கலாம் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. டிசம்பர் 26 ஆம் தேதி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் 27 ஆம் தேதி மண்டல அபிஷேகத்தை அடுத்து கோயில் நடை சாத்தபடும். இதன் பின்னர், மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி மீண்டும் நடை திறக்கப்படும். கொரோனா அச்சம் நீங்கி இருப்பதால் ஐயப்பன் கோயிலில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. எருமேலி, நிலக்கல், பம்பா, சன்னிதானம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.