உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்களை மீட்கும் நடவடிக்கைக்கு பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல். இது வைரலாகி அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.


இந்தப் புகைப்படம்  தண்ணீரை கடக்க இந்திய குடிமக்கள் ஏறியபோது பிரதமர் நரேந்திர மோடி பாதி தண்ணீரில் மூழ்கியிருப்பதை காட்டுகிறது. பாகிஸ்தான், சீனா மற்றும் அமெரிக்க குடிமக்கள் உதவிக்காக கூக்குரலிடுவதைக் காணலாம். அதே நேரத்தில் அந்தந்த நாட்டு தலைவர்களின் கேலியான புகைப்படங்கள் சுவர்களில் இருந்து எட்டிப் பார்க்கின்றன. மேலும், “பிரதமர்... மோடி ஜி, இந்தியாவின் நம்பிக்கைப் பாலம்”  என்றும் அமைச்சர் பியூஷ் கோயல் பதிவிட்டுள்ளார்.






ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் காயமடைந்துள்ளனர். போரை நிறுத்த வேண்டும் என்று பலரும் ரஷ்யாவிற்கு வேண்டுகோளும், கண்டனங்களும் தொடர்ந்து குவிந்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவிற்கு பலரும் பலவாறு தங்களது எதிர்ப்பை கூறி வருகின்றனர்.


இந்தப் போர் தொடங்கியது முதலே ரஷ்யாவிற்கு பல உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலில் சிக்கிய இந்திய மாணவர் ஒருவர் கார்கிவ் நகரில் நடைபெற்ற தாக்குதலில்  பரிதாபமாக உயிரிழந்தார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, அங்கிருக்கும் மாணவர்களை மீட்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனை பிரதமர் மோடி மேற்கொண்டார். ரஷ்யா அருகில் இருக்கும் நாடுகளில் இருந்த இந்திய மாணவர்களை மீட்க விமானங்கள் அனுப்பப்பட்டு மாணவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண