கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் 32 வயதான ஷா நவாஸ். இவர் அதே பகுதியில் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு யாரென்று தெரியாத ஒரு நபரிடம் இருந்து வாட்ஸ் அப்பில் ஹாய் என்று மெசேஜ் வந்துள்ளது.


தெரியாத எண்ணில் இருந்து மெசேஜ் வந்ததால், டாக்டர் முதலில் பதிலளிக்கவில்லை. தொடர்ந்து, அதே எண்ணில் இருந்து ஒரு குறிப்பிட்ட பெண்ணின் நிர்வாண புகைப்படங்கள் வந்துள்ளது. அதைத்தொடர்ந்து, அந்த டாக்டருக்கு மிரட்டி பணம் கேட்டு உள்ளனர். மேலும் பணம் தராவிட்டால் டாக்டர் மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுக்கப்படும் என்றும் மிரட்டியுள்ளனர். 


டாக்டர் கொடுக்க மறுத்ததால், ஒரு நபர் அவரது தொலைபேசிக்கு அழைத்துள்ளார். அதுவும் வெளிநாட்டில் இருந்து வந்த இணைய அழைப்பு. ஆனால் அது தொடர்ந்து தொல்லையாக மாறியதால், டாக்டர் காவல்துறையை தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். 


காவல்துறை அமைத்த பொறி : 


இதையடுத்து கடந்த சில நாட்களாக டாக்டரின் வாட்ஸ்அப்பை காவல்துறையினர் பயன்படுத்தி வந்தனர். மண்ணுட்டியை சேர்ந்த நௌஃபியா மற்றும் வேறு ஒரு நபர் ரூ.3 லட்சம் கேட்டுள்ளனர். அந்த செய்திக்கு பதிலளித்த போலீசார், பணத்தை தருவதாக ஒப்புக்கொண்டனர். அப்போது பெங்களூரில் இருந்து ஒரு பெண் பணம் பெற வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. 


பெங்களூரைச் சேர்ந்த பெண் : 


பெங்களூருவை சேர்ந்த 29 வயதான பெண் பெங்களூரில் உடற்பயிற்சி பயிற்சியாளராக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த பெண் திருச்சூர் ரயில் நிலையத்தில் இறங்கி, வாட்ஸ்அப்பில் மருத்துவரை தொடர்பு கொண்டார். பணம் வசூலிக்கும் இடம் மற்றும் நேரத்தையும் தெரிவிக்க, இதையடுத்து, மகளிர் காவல் துறையினர், திருச்சூர் காவல் உதவி ஆணையர் வி.கே.ராஜு, திருச்சூர் மேற்கு சப்-இன்ஸ்பெக்டர் பைஜூ ஆகியோர் அந்தப் பெண்ணைப் பிடிக்க முயற்சி எடுத்துள்ளனர். 


அந்த பெண் டாக்டரின் காரில் அருகில் வந்தபோது, அவரை போலீசார் மடக்கி பிடித்தனர். இந்த பெண் காயங்குளத்தை சேர்ந்த நிசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


அடிக்கடி அழைப்புகள்:


காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும்போது நிசாவின் போன் ஒலித்துக்கொண்டே இருந்தது. சந்தேகமடைந்த போலீசார் ஸ்பீக்கரை பயன்படுத்தி பேச சொல்லியுள்ளனர். போன் செய்த மண்ணுத்தியை சேர்ந்த நௌஃபியா, "ரூ. 3 லட்சம் எங்கே? தப்பி ஓட முயற்சிக்காதே. உடனே என்னிடம் வந்து கொடு” என்று நிசாவை மிரட்டியுள்ளார்.


இதையடுத்து நௌஃபியாவை நகரின் குறிப்பிட்ட இடத்திற்கு வரும்படி போலீசார் நிசாவை அறிவுறுத்தினர். 3 லட்சத்தை எடுப்பதற்காக அந்த இடத்தில் நௌஃபியா வந்தபோது, ​​மகளிர் போலீசார் அவரை கைது செய்தனர்.


வெளிநாட்டில் இருந்து அழைப்பு விடுத்தது யார்?


வெளிநாட்டில் இருந்து அழைப்பு விடுத்த நபர் குறித்து போலீசாருக்கு தகவல் எதுவும் கிடைக்காததால் நிசா மற்றும் நௌஃபியாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண