இந்தியாவை 14-ஆம் நூற்றாண்டில் டெல்லி சுல்தான்கள் ஆட்சி செய்து கொண்டிருந்தனர். அதில் குறிப்பாக முகமது பின் துக்ளக் மன்னனின் ஆட்சிக் காலம் மிகவும் கொடியதாக இருந்தது. இவரது ஆட்சி தொடர்பாக அவரது அவைக்கு, தூதராக வந்த வெளிநாட்டைச் சேர்ந்த இபன் பட்டூடா புத்தகத்தை எழுதியுள்ளார். மோராக்கோ நாட்டிலிருந்து வந்த பட்டூடா 6 ஆண்டு காலம் துக்ளக் அவையில் இருந்தார். அப்போது நடந்தவற்றை அவர் எழுதியுள்ளார். அதில், “துக்ளக் பிறருக்கு பரிசளிப்பது, மற்றும் பிறரை இரத்தம் சிந்த வைப்பது, என்ற இரண்டையும் மிகவும் விரும்புவராக இருந்தார் ” எனத் தொடங்கினார். அதன்பின்னர் அவர் செய்த கொடுஞ் செயல்களை தனது புத்தக்கத்தில் 30 பக்கங்கள் விரிவாக எழுதினார். 




அதில், “துக்ளக் ஆட்சி காலத்தில் டெல்லியில் வசித்த மக்கள் பெரியளவில் இன்னல்களை சந்தித்தனர். குறிப்பாக துக்ளக்கிற்கு டெல்லியிலிருந்து 1000 மையில் தொலைவில் தௌலதாபாத் என்ற நகரை கட்டமைக்கவேண்டும் என்ற திட்டம் இருந்தது. இதற்காக டெல்லியில் வசித்த மக்களை கட்டாயமாக அங்கு குடிபெயர உத்தரவிட்டார். இந்த உத்தரவை மீறுபவர்களை தனது அடிமைகள் மூலம் தௌலதாபாத் பகுதி இழுத்து வரும்படி ஆணையிட்டார். அதில் ஒரு பார்வையற்றவர் உட்பட பலரும் மிகவும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் 40 நாட்கள் நடந்தே தௌலதாபாத் பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டனர். இந்த நிகழ்வு முடிந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மக்களை தௌலதாபாத் பகுதியிலிருந்து துக்ளக் டெல்லிக்கு போகுமாறு உத்தரவிட்டார்” எனக் குறிப்பிட்டு அந்தளவு மிகவும் மோசமான ஆதிக்கவாதி என்று அவர் தெரிவித்திருந்தார். 




அந்தவகையில் தற்போது இந்தியாவிலும் ஒரு பெரிய துக்ளக் உள்ளார். அவர் வேறு யாரும் இல்லை. நம்முடைய பிரதமர் மோடிதான். அவர் நாட்டை அவருடைய விருப்பத்திற்கு ஏற்றவாறு வழிநடத்தி வருகிறார் என்று பலரும் குறிப்பிட்டு வருகின்றன. அத்துடன் தன்னுடைய குறையை எடுத்து கூறுவோருக்கு செவிமடுக்காமல் இருந்து வருகிறார். அவருடைய ஆட்சி கொரோனா பெருந்தொற்றை எந்தளவிற்கு மோசமாக கையாண்டு வருகிறது என்பதை உலகமே பார்த்து கொண்டிருக்கிறது. இதனை பாஜகவில் உள்ள சிலரும் நன்கு அறிவார்கள். எனினும் அவர்கள் வெளிப்படையாக இதுகுறித்து கருத்து தெரிவிப்பதில்லை. அவர் வல்லுநர்களின் கருத்திற்கு செவிமடுக்காததால் தற்போது இந்தியாவில் தினமும் 4000 பேருக்கு மேல் உயிரிழந்து வருகின்றனர். அத்துடன் நகரங்கள் மற்றும் கிராமங்கள் என அனைத்து பகுதிகளிலும் தற்போது வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இருப்பினும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தியதில் உலகிற்கு முன்மாதிரி என்று பிரதமர் மோடி தெரிவித்து வந்தார். 


அதேபோல துக்ளக் ஆட்சிக்கும் ஜனநாயக முறைப்படி தேர்தலில் வெற்றிப் பெற்ற மோடி அரசுக்கும் ஒரு சில ஒற்றுமைகள் உள்ள. துக்ளக் 14-ஆம் நூற்றாண்டில் சீனாவிலிருந்து பேப்பர் ரூபாய் நோட்டுகளை பார்த்து இங்கும் புதிய ரூபாய் நாணயங்களை தாமிரம்(copper) வகையில் அறிமுகப்படுத்தினார்.  அத்துடன் அப்போது புழக்கத்தில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்களின் மதிப்பை மிகவும் குறைத்தார். இது பெரிய பேரிடர் நடவடிக்கையாக மாறியது. அதேபோல 2016-ஆம் ஆண்டு பிரதமர் மோடியும் கருப்பு பணத்தை வேறு ஒழிக்க பணமதிப்பிளப்பு என்ற பேரிடர் நடவடிக்கையை எடுத்தார். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். எனினும் இந்த நடவடிக்கைக்கு பிறகு இந்திய ரிசர்வ் வங்கி 99.3% பணம் மீண்டும் வங்கிகளுக்கு வந்தது என தெரிவித்திருந்தது. இந்த நடவடிக்கை ஏழை எளிய மக்களை பெரிய அளவில் பாதித்தது. பலரை புதிய நோட்டுக்களுக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வைத்தது. ஆனால் இந்த நடவடிக்கை பொருளாதாரத்தில் இருந்த கருப்பு பணத்தை அளிக்கவில்லை.


மேலும் துக்ளக் எவ்வாறு டெல்லியை அளிக்க நினைத்தாரோ, அதேமாதிரி மோடியும் டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்டம் மூலம் டெல்லியை ஒரு எம்பிரியல் நகரமாக மாற்ற முயற்சி செய்து வருகிறார். இந்த புதிய சென்ட்ரல் விஸ்டா திட்டம் மூலம் இந்தியாவிற்கு புதிய நாடாளுமன்றம் மற்றும் மத்திய தலைமைச் செயலகம் உள்ளிட்டவற்றை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. 100 வருடம் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடம் தற்போதைய சூழலுக்கு ஏற்புடையதாக இல்லை எனக் கூறி பிரதமர் இத்திட்டத்தை அறிவித்தார். இந்தத் திட்டத்தை டெல்லி மக்கள் மீது மோடி எதிர்ப்பையும் மீறி திணித்துள்ளார்.




இந்தத் திட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்திய பொருளாதாரம் இவ்வளவு மோசமாக சென்று கொண்டிருக்கும் போது இந்தத் திட்டம் தேவையா என்றும் பலர் கேள்வி எழுப்பினர். ஏனென்றால் 2020-ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரத்தின் வளர்ச்சி 9.6 சதவிகிதம் வரை குறைந்தது. இந்தத் திட்டத்தின் மொத்த செலவு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இந்தியாவில் தற்போது 90 சதவிகித மக்கள் சிகிச்சைக்கு மருத்துவமனை இல்லாமல் தவித்து வரும் சூழலில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்தத் திட்டத்தால் எடிவின் லூயிடன்ஸ் மற்றும் ஹெர்பர்ட் பேக்கர் கட்டிய பழமையான கட்டடத்தின் சிறப்பு போகும் சூழல் உருவாகியுள்ளது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். 


சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் பிரிட்ஷர்கள் ஆகியோரை போல் டெல்லியில் பிரதமர்  மோடியும் சென்ட்ரல் விஸ்டா கட்டடத்தை தனது முத்திரை சின்னமாக பார்க்கிறார். அதற்காக பல ஆயிரம் இந்தியர்களின் உயிரையும் தியாகம் செய்ய அவர் தயாராக உள்ளார். டெல்லியில் உயிரிழந்தவர்களை எரிக்கும் தீ 24 மணி நேரமும் ஓய்வு இல்லாமல் எரிந்து வருகிறது. மேலும் அங்கு பலரும் ஆக்சிஜன், மருத்துவமனை படுக்கை உள்ளிட்டவற்றிற்காக அலைந்து வருகின்றனர். அத்துடன் அங்கு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலிலும் சென்ட்ரல் விஸ்டா பணிகள் இரவும் பகலும் நடைபெற்று வருகிறது. இதை விட பெரியளவில் மனித உயிர்களை மதிக்காத சூழல் இருக்க முடியாது. 


 


Disclaimer : இதில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் கருத்துகள். எந்த வகையிலும் ABP நாடு பொறுப்பேற்காது