பாளி மாவட்டத்தில் உள்ள கலாலி, பகரிவாலா பிஷ்னோயன் கிதானி, சவால்தா கலான், சவால்தா குர்த் ஆகிய கிராமங்களில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இவற்றைத் தவிர உயிர்தப்பிய 50 மயில்களைப் எடுத்துச்சென்று, ஜோத்பூரில் உள்ள மச்சியா உயிரியல் பூங்காவில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். இறந்துபோன மயில்களின் சில பகுதிகளை, போபாலில் உள்ள விலங்குநோய் பாதுகாப்புக்கான தேசிய நிறுவனத்தில் ஆய்வுசெய்வதற்காகக் கொண்டுசென்றுள்ளனர். அந்த பரிசோதனை அறிக்கை வந்தபின்னர்தான் எதனால் மயில்கள் இறந்துபோயின என்பது தெளிவாகும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மயில்கள் இறக்கத்தொடங்கிய கட்டத்தில் முதலில் 3 விலங்கு மருத்துவர்களைக் கொண்ட குழு அமைத்து, இறந்த பறவைகளை கூராய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது என்று மாவட்ட வனத்துறை அதிகாரி ஜெய்தேவ் சரண் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய மச்சியா உயிரியல் பூங்காவின் மீட்புப் படையின் உறுப்பினர் மகேந்திர கெலாட், “ கடந்த 10 நாள்களில் இங்குள்ள மீட்பு மையத்துக்கு 46 மயில்கள் மயக்கநிலையில் கொண்டுவரப்பட்டன. வரும்போதே 10 மயில்கள் இறந்துவிட்டன. நிறைய மயில்கள் சிகிச்சை முடியும்வரை உயிருடனே இருப்பதில்லை. இப்போது 22 மயில்கள்தான் உயிரோடு இருக்கின்றன. ஏதோ நச்சுத்தன்மை கொண்ட உணவு காரணமாக இருக்கலாம் எனப் படுகிறது. ஆனாலும் பரிசோதனை முடிவில்தான் சரியான காரணம் தெரியவரும்.” என்று கூறினார்.