ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், வாகனப் பதிவு, அனுமதி, உரிமையை மாற்றுதல் போன்றவற்றுடன் தொடர்புடைய ஆன்லைனில் செய்யக்கூடிய குடிமக்களை மையமாகக் கொண்ட 18 சேவைகளை 58 சேவைகளாக மாற்றியமைக்கும் அறிவிப்பை MoRTH வெளியிட்டுள்ளது, இதன்மூலம் RTO விற்கு செல்லவேண்டிய வேண்டிய தேவைகளை மேலும் நீக்குகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
MORTH அறிக்கை
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989-ன் கீழ் 14 செப்டம்பர் 2022 தேதியிட்ட GSR 703(E) இன் படி சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MORTH) வர்த்தகச் சான்றிதழில் விரிவான சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள விதிகளில் உள்ள சில முரண்பாடுகள் காரணமாக, வர்த்தகச் சான்றிதழின் பொருந்தக்கூடிய தன்மை குறித்து பல சந்தர்ப்பங்களில் விளக்கம் தேவைப்பட்டது. இது பல வணிக நிறுவனங்களை பாதித்தது. மேலும், வர்த்தகச் சான்றிதழுக்கான விண்ணப்பம் ஆர்டிஓவிற்கு சென்று நேரடியாக தாக்கல் செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறை இருந்தது. அதனால் ஆர்டிஒ வில் நிறைய நேரத்தை வீண் செய்யும் நிலை இருந்தது. வணிகம் செய்வதை எளிதாக்குவதை ஊக்குவிக்கும் முயற்சியில், வர்த்தகச் சான்றிதழ் பெறுவதை எளிமைப்படுத்தவும் நெறிப்படுத்தவும் புதிய விதிகளை MORTH அறிவித்துள்ளது" என்று எழுதியுள்ளனர்.
புதிய விதிகள் பின்வருமாறு:
- பதிவு செய்யப்படாத அல்லது தற்காலிகமாக பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு மட்டுமே வர்த்தகச் சான்றிதழ் தேவைப்படும். அத்தகைய வாகனங்கள் மோட்டார் வாகனங்களின் டீலர்/உற்பத்தியாளர்/இறக்குமதி செய்பவர் அல்லது விதி 126ல் குறிப்பிடப்பட்டுள்ள சோதனை நிறுவனத்திடம் மட்டுமே இருக்க முடியும்.
- வர்த்தகச் சான்றிதழ் மற்றும் வர்த்தகப் பதிவு மதிப்பெண்களுக்கான விண்ணப்பத்தை ஆர்டிஓவைச் சந்திக்காமல் வாகன் போர்ட்டலில் மின்னணு முறையில் பெறலாம். மேலும், விண்ணப்பதாரர் ஒரே விண்ணப்பத்தில் பல வகையான வாகனங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
- வர்த்தகச் சான்றிதழை வழங்குவதற்கான அல்லது புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 30 நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதில் 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படாத விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டதாகக் கருதப்படும்.
- வர்த்தகச் சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் 12 மாதங்களில் இருந்து 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- டீலர்ஷிப் அங்கீகார சான்றிதழ் (படிவம் 16A) டீலர்ஷிப் அங்கீகாரம் முழுவதும் ஒரே மாதிரியான தன்மையைக் கொண்டுவர அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வர்த்தகச் சான்றிதழ் டீலர்ஷிப் அங்கீகாரத்துடன் கோ-டெர்மினஸாக மாற்றப்பட்டுள்ளது.
- ஷோரூம்கள்/கோடவுன்களில் டீலர்ஷிப் அங்கீகார சான்றிதழையும் காட்சிப்படுத்த வேண்டும் என ஆணையிடப்பட்டது.
- வரும் நவம்பர் 1 முதல் இந்த நடைமுறைகள் செயல்படுத்தப்படுகின்றன. தற்போதுள்ள வர்த்தகச் சான்றிதழ்கள் புதுப்பிக்கப்படும் வரை செல்லுபடியாகும்.
குடிமக்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் திட்டம்
என வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த சேவைகளை தன்னார்வ அடிப்படையில் ஆதார் அங்கீகாரத்தின் உதவியுடன் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆர்டிஒ தொடர்பு இல்லாமல், நேரடியாக சந்திக்க தேவையில்லாத இத்தகைய சேவைகளை வழங்குவது குடிமக்களின் நேரத்தை மிகவும் சேமிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டிஒ-வில் உள்ள கடும் கூட்டம் காரணமாக, சில சிறிய வேலையை செய்யக்கூட ஒரு நாள், இரண்டு நாள் கூட நேரத்தை எடுத்துக்கொள்ளும் நிலை இருந்தது. இதனை சரிசெய்யவே இந்த மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்