அசாம் மாநிலத்தில் உள்ள தேசிய பூங்காவில் காண்டாமிருகம் சுற்றுலாப்பயணிகளை சுமார் 3 கிலோமீட்டருக்கு துரத்தும் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 


சுற்றுலா பயணிகளை துரத்திய காண்டாமிருகம்:


மனாஸ் தேசிய பூங்காவில் ஒற்றை கொம்பு காண்டாமிருகம் சுற்றுலா பயணிகள் வந்த வாகனத்தை துரத்தியது. இந்த சம்வத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும்,  இச்சம்பவம் வியாழக்கிழமை இடம்பெற்றதாக அந்த அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாக தற்போது பரவிவருகிறது. அந்த வீடியோவில், மனாஸ் தேசிய பூங்காவில் ஒற்றை கொம்பு காண்டாமிருகம் சுற்றுலா வாகனத்தை துரத்தியது.


"இது டிசம்பர் 29 அன்று இந்த சம்பவம் மனாஸ் தேசிய பூங்காவில் நடந்துள்ளது. உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை" என்று மனாஸ் தேசிய பூங்காவின் வன வரம்பு அதிகாரி பாபுல் பிரம்மா கூறியதாக ANI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வைரலான வீடியோவை வனத்துறை உறுதி செய்துள்ளது என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 






முன்னதாக நவம்பர் மாதம், அசாமின் காசிரங்கா தேசிய பூங்காவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தால் தாக்கப்பட்டதில்  இரண்டு பேர் படுகாயமடைந்தனர். தேசிய பூங்காவின் கொஹோரா வனப்பகுதிக்கு உட்பட்ட போர்பீல் பகுதியில், பூங்காவிற்குள் சேதமடைந்த சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.


காயம்:


காயமடைந்தவர்கள் தேசிய பூங்காவில் வனப் பணியாளர் பினோத் சரோ மற்றும் உள்ளூர் பகுதியைச் சேர்ந்த இளைஞரான ஜிபன் சரோ என அடையாளம் காணப்பட்டனர். காயமடைந்தவர்கள் கோஹோரா சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். போர்பீல் வேட்டை தடுப்பு முகாம் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக வன வரம்பு அதிகாரி பிபூதி ரஞ்சன் கோகோய் ANI-யிடம் தெரிவித்தார்.


இந்நிலையில், நேற்று முன் தினம் அசாம் தேசிய பூங்காவில் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் சுற்றுலாப்பயணிகளை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு துரத்தி வந்துள்ளது. இதில், பயணிகள் மிகவும் அச்சமடைந்து அலறும் சத்தமும் வீடியோவில் இருக்கிறது. 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஜீப்பில் வந்த பயணிகளை துரத்தி வந்த ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் சோர்வடைந்து காட்டிற்குள் சென்று விட்டது.