அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். துப்ரி மாவட்டத்தில் உள்ள ஹல்திபாரி என்ற இடத்தில் காண்டாமிருகம் வேகமாக சென்று டிரக் மீது மோதுவதை காணலாம்.


வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா, "காண்டாமிருகங்கள் நமது சிறந்த நண்பர்கள். அவர்களின் இடத்தில் ஆக்கிரமிப்பு செய்வதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். 


 






ஹல்டிபாரியில் நடந்த இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் காண்டாமிருகம் உயிர் பிழைத்துள்ளது. வாகனம் மறித்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், காசிரங்காவில் விலங்குகளை காப்பாற்ற வேண்டும் என்பதில் தீர்மானமாக உள்ளோம். 32 கிமீ நீளம் கொண்ட சிறப்பு நடைபாதையை அமைக்க பணியாற்றி வருகிறோம்.


ஹிமந்தா பகிர்ந்த பத்து வினாடி வீடியோவில், வனப்பகுதியிலிருந்து காண்டாமிருகம் வெளியே செல்வதை காணலாம். சாலையை கடக்க முயன்றபோது ஒரு டிரக் மீது மோதுகிறது. அதன் பிறகு, காண்டாமிருகம் கீழே விழுகிறது. பின்னர், எழுந்து, மீண்டும் கீழே விழுந்து, மீண்டும் காட்டுக்குள் ஓடுவதை வீடியோவில் காணலாம்.


இந்த வீடியோ மற்றும் ஹிமந்தாவின் ட்வீட்டுக்கு பல்வேறு தரப்பினர் பதில் அளித்து வருகின்றனர். "டிரைவர் அங்கு என்ன செய்கிறார்? காண்டாமிருகம் திடீரென சாலையை கடக்க முயன்றபோது, ஓட்டுநர் நன்றாக ஓட்டியுள்ளார். பாலங்களை அமைக்க வேண்டும். சாக்குபோக்கிற்காக அபராதம் விதிக்க கூடாது" என ஒருவர் பதிவிட்டுள்ளார்.


 






காசிரங்கா தேசிய பூங்காவை ஆக்கிரமிப்பு, காண்டாமிருக வேட்டையில் இருந்து விடுவித்ததற்காகவும், போடோலாந்து பகுதியில் பசு கடத்தலை தடுத்து நிறுத்தியதற்காகவும், சட்டவிரோதமாக சுப்பாரி வர்த்தகம் செய்வதை தடுத்ததற்காகவும் அசாம் மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை அன்று பாராட்டு தெரிவித்திருந்தார்.