கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளது, மேற்கு வங்க அரசுக்கு மேலும் நெருக்கடியை கொடுத்துள்ளது.


மருத்துவர்கள் உண்ணாவிரத போராட்டம்:


கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆர் ஜி கர் மருத்துவமனையில் ஜூனியர் மருத்துவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். இவர்கள் 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இரண்டரை நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  


மூத்த மருத்துவர்கள் ராஜினாமா?:


தங்களின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூனியர் டாக்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு இரண்டரை நாட்கள் கடந்துவிட்டன. இதற்கு அரசு தரப்பில் முறையாக பதில் அளிக்காததால், மூத்த மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர்.






இந்தச் சூழலில், மூத்த மருத்துவர்கள் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளது , மேற்குவங்க அரசுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது. ஆர்.ஜி.கர் மருத்துவமனை டாக்டர்கள் மற்ற மருத்துவமனைகளின் மருத்துவர்களும் தங்களுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


இதுவரை 30க்கும் மேற்பட்ட டாக்டர்கள் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். உண்ணாவிரத போராட்டத்தில்,  ஜூனியர் டாக்டர்களின் உடல் நிலை மோசமடைந்துள்ளது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


மூத்த மருத்துவர்களில் ஒருவர் ABP செய்தி குழுமத்திடம் தெரிவிக்கையில்


"கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக எங்கள் மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருகிறது. இதற்கு மேல் இருக்க முடியாமல், நாங்கள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா முடிவு எடுத்துள்ளோம் என தெரிவித்தார். 


இந்நிலையில், தொடர் போராட்டங்களில் மருத்துவர்களில் ராஜினாமா முடிவானது, மம்தா பானர்ஜி அரசுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.