Republic Day 2025 Parade: குடியரசு தின அணிவகுப்பு; நேரலையில் காண்பது எப்படி? விவரம் இதோ!

Republic Day 2025: குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சிகளை நேரில் காண்பது எப்படி என்பது குறித்து காணலாம்.

Continues below advertisement

நாட்டின் குடியரசு தின விழா வரும் 26-ம் தேதி,(26.01.2025) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 

Continues below advertisement

76-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்:

இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ (Indonesian President Prabowo Subianto) நாளை மறுநாள் (26.01.2025) காலை தலைநகர் புதுடெல்லியில் நடைபெறும் பிரம்மாண்ட குடியரசு தின அணிவகுப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பை முன்னிட்டு முப்படைகளின் பிரம்மாண்ட அணிவகுப்பு, முப்படை வீரர்களின் சாகசங்களும் நடைபெற உள்ளது. ஒட்டுமொத்த டெல்லியும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

குடியரசு தின விழாவின் பிரத்யேக கழுகு பார்வை காட்சிகள் தொலைக்காட்சி சேனல்களிலும், யூட்யூப் பக்கங்களிலும் ஒளிபரப்பு செய்யப்படும். இதை அதிகாரப்பூர்வ இணையதள, சமூக வலைதள பக்களிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். 

76-வது குடியரசு தின விழா ‘Theme':

இந்தியா குடியரசு நாடாக மாறி 75- ஆண்டுகள் நிறைவடைகிறது. ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அதிகாரத்தில் இருக்கும் அமைப்பு குடியரசு (Republic)  எனப்படுகிறது. அதன்படி குடியரசு நாள் என்பதை இந்தியா ஜனவரு 26-ம் தேதி கொண்டாடி வருகிறது.  இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாள் குடியரசு நாள். சுந்தந்திர இந்தியாவின் அரசியலமைபு நிர்ணய மன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டம் அமல்படுத்தப்பட்ட நாள் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறது. 1950, ஜன்வரி 36-ம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. ஆண்டுதோறும் குடிரசு நாள் அணிவகுப்பு டெல்லி Kartavya Path (ராஜபாதை என முன்பு அழைக்கப்பட்டது.) நிகழும். குடியரசுத் தலைவர் மாளிகையில் தொடங்கி, இந்தியா கேட் வரை நடைபெறும். 

இந்தாண்டு அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75-ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக அணிவகுப்பு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”Swarnim Bharat – Virasat aur Vikas' (Golden India – Heritage and Development)” என்பது இந்தாண்டின் கருப்பொருளாக உள்ளது. ’பொற்கால இந்தியா - பாரம்பரியம் மற்றும் மேம்பாடு; என்பது இதன் பொருள்.
இந்தியாவின் மிகச்சிறந்த கலாச்சாரம், தொட்ச்சியான வளர்ச்சி ஆகியவற்றை போற்றும் விதத்தில் அமைந்துள்ளது. 

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி:

குடியரசு தினத்தை முன்னிட்டு டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பு மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்ற உள்ளார். பிரம்மாண்டமாக நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் முப்படைகளில் கம்பீரமான அணிவகுப்பும், கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் பல்வேறு மாநிலங்களின் ஊர்திகளும் நடைபெறும். இதை கண்டுகளிப்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பார்கள்.

 அலங்கார ஊா்தி:

15 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசம் ஆகியவற்றை சோ்ந்த 16 அலங்கார ஊா்திகளும் மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் நிறுவனங்களைச் சோ்ந்த 15 அலங்கார ஊா்திகளும் அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளன. ஆந்திர பிரதேசம், பிஹார், சண்டிகர், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலிம்m டை மற்றும் டாமன், கோவா, குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், பஞ்சாப், திரிபுரா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், மேற்கு வங்களாம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். 

DRDO-வின் (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு) சிறப்பு ஊா்தி: இதுதவிர ‘பன்முனைத் தாக்குதல்களை தடுக்கும் பல அடுக்கு பாதுகாப்பு ’ என்ற கருப்பொருளுடன் டிஆா்டிஓ தனக்கென தனி அலங்கார ஊா்தியை காட்சிப்படுத்தவுள்ளது. இந்திய ராணுவத்தின் சார்பில் தரையில் உள்ள இலக்குகளை குறிவைத்து தாக்கும் பிரளய் ஏவுகணை முதன்முறையான அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. 

சி-295, சி-17 குளோப்மாஸ்டா், பி-81, சி-130ஜே சூப்பா் ஹொ்குலிஸ்,  எம்ஐஜி-29, எஸ்யு-30 உள்ளிட்ட போா் விமானங்களும் அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளன. இன்னும் ஏராளமான சிறப்புகள் நிகழ்ச்சியில் இடம்பெற உள்ளது. 

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சி - காண்பது எப்படி?

இந்த நிலையில், டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவை நேரில் மட்டுமின்றி தொலைக்காட்சி வாயிலாகவும் கண்டுகளிக்கலாம். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் குடியரசு தின நிகழ்ச்சிகள் நேரலை செய்யப்பட உள்ளது. இந்திய அரசின் இணையதள பக்கமான https://indianrdc.mod.gov.in/  -என்ற இணையதளத்தில் சென்று இலவசமாக குடியரசு தின விழா நிகழ்ச்சிகளை காணலாம். மத்திய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி வழங்கும் தளமான பி.ஐ.பி.யிலும் (PIB) நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

பிரம்மாண்ட அணிவகுப்பு

சாமானியர்களும் அணிவகுப்பை கண்டு களிக்கும் விதமாக மத்திய அரசு ஆமாந்த்ரன் என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த தளத்தில் குடியரசு தின நிகழ்ச்சியை நேரில் கண்டுகளிக்கலாம். குடியரசு தின விழாவில் பங்கேற்க நினைக்கும் பொதுமக்கள் தங்களுக்கான டிக்கெட்டுகளை அதற்கான பிரத்யேக இணையதளமான https://aamantran.mod.gov.in/login -என்ற இணையதளத்தில் சென்றும் பெறலாம். இது முன்பதிவு செய்யும் முறை என்பதால் குறிப்பிட்ட காலத்திற்குள் பதிவு செய்திருக்க வேண்டும். டிக்கெட்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

ஆஃப்லைன் டிக்கெட் பெறுவது எப்படி?

டெல்லியில் உள்ள சில இடங்களில் நேரடியாக அணிவகுப்பை காண டிக்கெட் பெறலாம்.

  • Sena Bhawan (Gate No. 2)
  • Shastri Bhawan (Near Gate No. 3)
  • Jantar Mantar (Near Main Gate)
  • Pragati Maidan (Gate No. 1)
  • Rajiv Chowk Metro Station (Gates 7 & 8)

குடியரசு தின நாள் வாழ்த்துகள்..

Continues below advertisement