Republic Day 2023 LIVE: தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தியில் இடம்பெற்ற ஔவையார், வேலுநாச்சியார்..!
Republic Day 2023 LIVE Updates: நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், இதற்கான கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது.
டெல்லியில் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு சார்பில் கலாச்சார அலங்கார ஊர்தி அணிவகுத்து சென்றது. அதில் சங்க காலம் முதல் தற்போது வரை பெண்களின் பங்களிப்பு குறித்து அலங்கார ஊர்தி வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஔவையார், வேலுநாச்சியார், எம்.எஸ். சுப்புலட்சுமி, பால சரஸ்வதி, மூவலூர் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டி, இயற்கை விவசாயி பாப்பம்மாளின் உருவங்கள் அடங்கிய சிலை மற்றும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலும் இடம்பெற்றது.
குடியரசு தின விழா.. அணிவகுப்பில் இடம்பெற்ற அசாம் அலங்கார ஊர்தி..!
குடியரசு தின அணிவகுப்பில் அனைத்து பெண்களையும் கொண்ட மத்திய ரிசர்வ் போலீஸ் படை அணிவகுப்பு குழுவிற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மரியாதை ஏற்று கொண்டார்.
குடியரசு தின விழா அணிவகுப்பின் சிறந்த அணிவகுப்புக் குழுவை 15 முறை வென்ற டெல்லி காவல்துறை, இந்த முறையும் பங்கேற்றது. இதை காவல்துறை உதவி ஆணையர் ஸ்வேதா கே சுகதன், ஐபிஎஸ் தலைமை தாங்குகிறார். அணிவகுப்புக் குழுவில் ஒரு உதவி காவல் ஆணையர், இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள், 44 தலைமைக் காவலர்கள் மற்றும் 100 காவலர்கள் உள்ளனர்.
ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மற்றும் கடற்படையின் இசை அணிவகுப்பும் நடைபெற்றது.
கேப்டன் சுனில் தசரதே தலைமையிலான 27 வான் பாதுகாப்பு ஏவுகணைப் படைப்பிரிவின் ஆகாஷ் ஆயுத அமைப்பின் அமிர்தசரஸ் ஏர்ஃபீல்ட்' மற்றும் 512 லைட் ஏடி ஏவுகணைப் படைப்பிரிவினர் அணிவகுத்து சென்றனர்.
லெப்டினன்ட் பிரஜ்வல் கலா தலைமையிலான 861 ஏவுகணைப் படைப்பிரிவின் பிரம்மோஸ் பிரிவு, கடமை பாதையில் அணிவகுத்து சென்றது.
இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையில் ஊர்திகளின் அணிவகுப்பு மரியாதை நடைபெற்று வருகிறது. பாரா ரெஜிமண்ட், பஞ்சாப் ரெஜிமண்ட், ராஜ்புதானா ரைபிள்ஸ், சீக்கிய ரெஜிமண்ட் உள்ளிட்டவை அணிவகுத்து சென்றனர்.
74வது குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் சிசி பங்கேற்றுள்ளார்.
தேசியக்கொடியை ஏற்றி வைத்தபின், பல்வேறு படைப்பிரிவு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்று வருகிறார்.
குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் மரியாதை செலுத்தினார்.
இந்திய திருநாட்டின் 74 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை சாய் விளையாட்டு அரங்கில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா தேசியக் கொடியை ஏற்றி காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் பதக்கத்தை கோவை எம்.ஏ. இனயத்துல்லாவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார்.
குடியரசு தின்னத்தையொட்டி வீர தீரச்செயலுக்கான அண்ணா பதக்கங்களை 5 பேருக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார்.
தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் தேசிய கொடியினை ஏற்று வைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உடன் உள்ளார்.
புதுக்கோட்டையில் நடைபெற்ற குடியரசு தின விழாவை திமுக எம்பி எம்.எம். அப்துல்லா புறக்கணித்து சென்றார். விழாவில் தனக்கு முறையான இருக்கை ஒதுக்கப்படவில்லை என குற்றம்சாட்டி விழாவை புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலத்தில் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
74-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர்கள் தேசியக் கொடியை ஏற்றினர். குடியரசு தினத்தையொட்டி பயனாளிகளுக்கு நலத்திட்டங்களையும் ஆட்சியர்கள் வழங்கினர்.
74வது குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாட்டில் அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர்கள் தேசிய கொடியேற்றினர்.
கடந்த நவம்பர் 2022 வரை 19, 281 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக குடியரசு தின புத்தகத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினவிழாவில் முப்படை, படைப்பிரிவு வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ரவி ஏற்று வருகிறார்.
தேசிய கொடியை ஏற்றினார் ஆளுநர் ஆர்.என். ரவி..!
நேரலையில் காண...
நாட்டுக்காக இன்னுயிரை தியாகம் செய்த தீரமிக்க நம் வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
வேளாண்மை துறை சிறப்பு விருது புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வசந்தாவுக்கு வழங்கப்படுகிறது.
குடியரசு தினத்தையொட்டி வீர தீரச்செயலுக்கான அண்ணா பதக்கங்களை தமிழ்நாடு அரசு 5 பேருக்கு அறிவித்துள்ளது.
சிறந்த காவல்நிலையத்துக்கான முதலமைச்சர் விருது 3 காவல் நிலையங்களுக்கு வழங்கப்படுகின்றன. அதன்படி, திருப்பூர் வடக்கு காவல் நிலையத்துக்கு முதல் பரிசு, திருச்சி கோட்டை காவல் நிலையத்துக்கு இரண்டாம் பரிசு, திண்டுக்கல் வட்ட காவல் நிலையத்துக்கு சிறந்த காவல் நிலையத்துக்கான 3வது பரிசு வழங்கப்படுகிறது.
அனைத்து கிராம ஊராட்சிகளிலும் இன்று காலை 11 மணியளவில் கிராமசபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணங்களால் இன்று முற்பகல் வரை பொதுமக்கள் பார்வையிட அனுமதியில்லை என தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை மெரினா கடற்கரையில் தேசிய கொடி ஏற்றுகிறார்.
குடியரசு தினத்தையொட்டு இன்று டெல்லி கடமையின் பாதையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.
Background
Republic Day 2023 LIVE Updates: நாடு முழுவதும் இன்று 74வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், இதற்கான கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய நாட்டிற்கென தனி அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு அது நடைமுறைக்கு வந்த நாள் 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 தேதி தான். அந்த நாளே குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு மத்திய, மாநில அரசு சார்பில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்படுவதோடு, கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
மத்திய அரசு சார்பில் குடியரசு தின விழா:
இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும். மத்திய அரசு சார்பில் குடியரசு தின விழா டெல்லியில் உள்ள ராஜபாதையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்தாண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட கடமையின் பாதையில் (ராஜபாதை) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. அங்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடி ஏற்றுகிறார். காலை 8 மணிக்கு தொடங்கும் இந்நிகழ்ச்சியில் அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சியினரின் முக்கிய பிரமுகர்களும் வருகை தருவார்கள்.
இந்த விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி, இந்தியா கேட் அருகே உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார். இதனைத் தொடர்ந்து கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ள கடமையின் பாதை விஜய் சவுக் குடியரசுத் தலைவர் மாளிகையின் சந்திப்பு பகுதிக்கு வருகை தருவார். இதனையடுத்து குடியரசுத்தலைவர் தேசியகொடி ஏற்றுவார். அப்போது தேசிய கீதம் இசைக்கப்பட்டு, கொடி வணக்கம் செலுத்தியவுடன் அணிவகுப்பு தொடங்கும். இது குடியரசுத் தலைவர் மாளிகையில் தொடங்கி இந்தியா கேட் வழியாக செங்கோட்டை வரை செல்லும்.
பிரமாண்ட அணிவகுப்பு
இந்தியாவின் உள்நாட்டு திறன், பெண்களின் வலிமை, ராணுவத்திறன், பன்முகத்தன்மை உள்ளிட்டவற்றை பிரதிபலிக்கும் அணிவகுப்பு மிக பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ராணுவ பிரிவில் முப்படைகள் அணிவகுப்பில் குதிரைப்படை மட்டுமின்றி ஒட்டக்கப்படையும் இடம் பெறுகிறது. அதேசமயம் கடற்படையில் 144 இளம் மாலுமிகளும், விமானப்படையில் 148 வீரர்களும், முதல்முறையாக 3 பெண் அதிகாரிகள், அக்னிபாத் திட்டத்தில் இருந்து 6 வீரர்களும் குடியரசுத்தின அணிவகுப்பில் பங்கேற்கிறார்கள்.
விழாவில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நடக்கவுள்ள குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி கலந்து கொள்கிறார். இதனை முன்னிட்டு அவர் முன்னதாகவே டெல்லிக்கு வருகை தந்து விட்டார். அவரது முன்னிலையில் எகிப்து நாட்டு படையினரும் அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர்.
தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி
பிரமாண்ட அணிவகுப்பில் தமிழ்நாடு உட்பட 17 மாநிலங்கள் மற்றும் 6 துறைகளின் அலங்கார ஊர்திகளும் பங்கேற்கவுள்ளது. தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி சமூக மாற்றத்துக்கு உதவிய பெண்கள் வழங்கிய பங்களிப்பை பெண் தலைவர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதுமேலும் நாடு முழுவதிலும் இருந்து 500க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் பங்கேற்று கலை, கலாச்சாரத்தை பிரதிபலிக்கு வண்ணம் நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
அதேசமயம் குடியரசு தின அணிவகுப்பின் இறுதியாக வீரர்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இது நிச்சயம் அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் இருக்கும். விமான சாகசத்தில் 45 விமானங்கள் பங்கேற்கும் நிலையில் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -