இந்தியா 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது. ஆனால் இந்தியாவுக்கென்று அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கப்படவில்லை. இந்திய தலைவர்கள் அடங்கிய அரசியல் நிர்ணய சபையானது, அரசியல் அமைப்பு சட்டம் உருவாக்கும் பணியை உருவாக்கும் பணியை மேற்கொண்டு வந்தது. இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது நவம்பர் 26 ஆம் தேதி 1949 ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையால்  ஒப்புதல் பெறப்பட்டது.


அதையடுத்து, இந்திய அரசியல் அமைப்பு சட்டமானது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. வெளிநாட்டவர்கள் தலையீடின்றி இந்தியாவுக்கு என்று ஒரு சட்டம்  நடைமுறைக்கு வந்த நாளே குடியரசு தின விழாவாக அனுசரிக்கப்படுகிறது.


இந்நிலையில் குடியரசு தின விழாவை மகிழ்ச்சியாக சிறப்பிக்கும் வகையில், கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தேசபக்தி சம்பந்தமான திரைப்படங்களை பார்த்து மகிழுங்கள்.  


சிறந்த 10 திரைப்படங்கள்:


ஜெய்ஹிந்த்:




நடிகர் அர்ஜுன் இயக்கி நடித்த இத்திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியான பரத் (அர்ஜுன் ) , பிரியா ரஞ்சிதா என்ற போலீஸ்காரரை காதலிக்கிறார். ஒரு பயங்கரவாதக் குழு  பரத் சில கைதிகள் மற்றும் அவரது காதலருடன் பயங்கரவாத குழு மறைந்திருக்கும் தீவுக்கு செல்ல முடிவு செய்கிறார். இது ஒரு ரகசியமான மற்றும் ஆபத்தான பணி. அவர்களின் தாக்குதல்களை அவரால் தடுக்க முடியுமா  என்பது கதை


வீரபாண்டிய கட்டபொம்மன்


ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னன் வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றிய இப்படத்தில் சிவாஜி கணேசன் கட்டபொம்மனாகவே வாழ்ந்து வீர வசனங்கள் பேசி கவர்ந்திருப்பார்.


ராஜபார்ட் ரங்கதுரை



நாடக நடிகர் ராஜபார்ட் ரங்கதுரையின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படம். இப்படத்தில்  பகத்சிங், திருப்பூர் குமரன் ஆகியோரின் பாத்திரங்களில் சிவாஜி தோன்றி அனைவரையும் கவர்ந்திருப்பார்.


லகான்:




அஸூதோஸ் கௌவாரிகர் இயக்கத்தில் அமீர்கான் தயாரிப்பில் அமீர்கானே நடித்திருந்தார். பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் போது, புவன் என்ற விவசாயி கேப்டன் ஆண்ட்ரூ ரஸ்ஸலின் சவாலை ஏற்றுக்கொண்டு, கிரிக்கெட் விளையாட்டில் தனது அணியை தோற்கடித்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு தனது கிராமத்தை வரி செலுத்தாமல் இருக்கச் செய்கிறார். 


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்: ஃபட்காட்டன் ஹீரோ


ஷியாம் பெனகல் இயக்கிய இப்படத்தில் நேதாஜி வேடத்தில் சச்சின் கெடேகர் இப்படத்தில் நடித்திருப்பார்.


பார்டர்:


1971-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே நடந்த போரின்போது நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. மரணத்தை நெருங்கும் ஒரு பயங்கரமான மோதலுக்குப் பிறகு, முக்கியமான லோங்கேவாலா போரில் போராடும் பல இளம் வீரர்கள் ஒன்றிணைந்து வாழ்க்கை, காதல் மற்றும் குடும்பக் கதைகளைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் உயிர் வாழ முயற்சிக்கின்றனர்.


உரி:தி சர்ஜிகல் ஸ்டிரைக்


இத்திரைப்படமானது, இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் உரி பகுதியில் நடந்த தாக்குதலை அடிப்படையாக கொண்டு, இத்திரைப்படத்தை ஆதித்யா இயக்கியிருந்தார். விக்கி கௌஷல், பரேஷ் ராவல், மொஜித் ரெய்னா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


இந்தியன்


சங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், சுகன்யா நடித்துள்ள இப்படம் சுதந்திரப் போராட்ட வரலாறை நினைவுகூறும் வகையில் இப்படத்தின் காட்சிகள் அமைந்திருக்கும்.


சர்தார் உத்தம் சிங் 


ஷூஜித் சிர்காரின் விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்ற இப்படம் ஜாலியன் வாலாபாக் படுகொலையைச் சுற்றி அமைந்திருக்கும்


சிட்டகோங்


உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு, 1930 களில் கிழக்கு வங்காளத்தில் நடக்கும் கதையாக அமைந்துள்ளது.