மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்க்கபடும் வழக்குகளுக்கு மத்திய அரசு நிதி தருவதற்கு தயாராக உள்ளதால் அவ்வாறு தரப்படும் நீதி கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜீ தெரிவித்துள்ளார்.


விழுப்புரம் சட்டக்கல்லூரியில் சட்டப்பணிகள் தொடர்பான சிறப்பு முகாமினை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரன்ரிஜிஜீ கலந்து கொண்டு 2 கோடியே 36 லட்சத்து 18 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி. ராஜா சட்டப்பணிகள் ஆனையக்குழு தலைவர் நீதிபதி மகாதேவன் ஆட்சியர் மோகன், உள்ளிட்ட அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். சட்டக்கல்லூரியில் தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்ந்து அரங்குகள் அமைக்கப்பட்டதை பார்வையிட்ட பின் மேடையில் பேசிய






மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரன்ரிஜிஜீ சட்டகல்லூரியில் தமிழக அரசு அதிகாரிகள் பல்வேறு துறை சார்ந்து சிறப்பான அரங்குகளை அமைத்துள்ளதாகவும், கிராம புறங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தி வருவதாகவும்,மத்திய அரசு நலத்திட்டம் கொண்டு வருவது கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக செயல்படுவதாக கூறினார். அதனை தொடர்ந்து பேசிய அவர் மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்க்கப்படும் வழக்குகளுக்கு மத்திய அரசு நிதி தருவதற்கு தயாராக உள்ளதால் அவ்வாறு தரப்படும் நீதி கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் எனவும் ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் விடுவிக்கப்படலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்க கூடாது எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதலாக நீதிபதிகள் விரைவில்  நியமிக்கப்படுவார்கள் என கூறினார்.


இந்திய அரசு இளைஞர்கள் கல்வி  அறிவு பெற்று சிறந்து விளங்கவேண்டும் என்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும், பொருளாதாரத்தில் 5 இடத்தில் இந்தியா உள்ளதால் பல்வேறு வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், 2047 ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் வளர்ச்சி பெற்றிட வேண்டும் என பிரதமர் மோடி செயல்படுவதாக தெரிவித்தார். மேலும் விழுப்புரத்தில் அமைந்துள்ள சட்டக்கல்லூரி அழகான இயற்கை சூழலில் அமைந்துள்ளதாகவும், சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் எதிர்கால நீதிபதிகளாக வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறினார்.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.